0 வெற்றி மழையின் கருணையால் 1 புள்ளியுடன் வீட்டுக்கு கிளம்பிய பாகிஸ்தான்.. எவ்வளவு பரிசுத்தொகை பெறும்?

IND vs PAK
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. 29 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் நடைபெறும் இந்த ஐசிசி தொடரில் உலகின் டாப் 8 அணிகள் விளையாடுகின்றன. மேலும் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அப்படிப்பட்ட இந்தத் தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளன.

மறுபுறம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. தங்களது முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராகவும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த அந்த அணி கோப்பையை தக்க வைக்க முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

பாகிஸ்தானின் பரிதாபம்:

அந்த சூழ்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் தங்களது கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. அதில் குறைந்தபட்சம் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றியை பெறும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆரம்பம் முதலே மழை பெய்ததால் அப்போட்டியை ரத்து செய்த நடுவர்கள் 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொடுத்தனர்.

அந்த 1 புள்ளியும் மழையின் கருணையால் பாகிஸ்தானுக்கு கிடைத்திருக்கலாம் என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த வருடம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேசம் தோற்கடித்தது. மொத்தத்தில் இத்தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் பாகிஸ்தான் ஏமாற்றத்தை சந்தித்தது. அதனால் ஸ்காட்லாந்து, கென்யாவுக்கு பின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத அணி என்ற மோசமான உலக சாதனையையும் பாகிஸ்தான் சமன் செய்தது.

- Advertisement -

ஐசிசி பரிசுத்தொகை:

மேலும் குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் -0.443 ரன்ரேட் காரணமாக வங்கதேசம் 3வது இடத்தைப் பிடித்தது. -1.087 ரன்ரேட் காரணமாக பாகிஸ்தான் கடைசிப் இடத்தை பிடித்து மற்றுமொரு அவமானத்தையும் பரிதாபத்தையும் சந்தித்தது. இருப்பினும் இத்தொடரில் விளையாடியதற்காக ஏற்கனவே ஐசிசி அறிவித்த படி 125000 அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் ஊக்கத்தொகையாக பெற உள்ளது.

இதையும் படிங்க: அரை நாளில் தோனி எடுத்த முடிவு தான் நானும் ரோஹித்தும் 10 ஆண்டுகள் இணைந்து விளையாட காரணம் – ஷிகர் தவான்

அது போக குரூப் சுற்றுடன் வெளியேறியதற்காக 140000 அமெரிக்க டாலர்களையும் பாகிஸ்தான் பரிசாக பெறும். அந்த வகையில் மொத்தமாக இத்தொடரில் பங்கேற்றுவதற்காக பாகிஸ்தான் 265000 அமெரிக்க டாலர்களை பரிசாக பெற உள்ளது. ஒரு வெற்றியைக் கூட பெறாவிட்டாலும் இந்திய ரூபாயில் சுமார் 2.31 கோடிகளை பாகிஸ்தான் பரிசாக பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement