அரை நாளில் தோனி எடுத்த முடிவு தான் நானும் ரோஹித்தும் 10 ஆண்டுகள் இணைந்து விளையாட காரணம் – ஷிகர் தவான்

Dhawan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரரான ஷிகர் தவான் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது ரோகித் சர்மாவுடன் களமிறங்கி துவக்க வீரராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனி அன்று ரோகித் சர்மாவையும் தவானையும் துவக்க வீரர்களாக மாற்றியது இந்திய அணியின் எதிர்காலத்தையும் வலுப்படுத்தியது என்று கூறலாம்.

தோனி எடுத்த அந்த முடிவுதான் சூப்பர் : ஷிகர் தவான்

ஏனெனில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு 2013-இல் புதிய துவக்க வீரர்களாக அவர்கள் இருவரையும் களம் இறக்கிய தோனி அந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

ஐசிசி தொடர் என்றாலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிகர் தவான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதோடு தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட சிறப்பு விருந்தினராக அவர் இந்திய அணி வீரர்களை சந்தித்து இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக தன்னுடன் ரோகித் சர்மாவை துவக்க வீரராக களமிறக்கியது தோனியின் அசத்தலான முடிவு என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துவக்க வீரர்களுக்கான ஜோடி யார் என்பதை அரைநாளில் தான் தோனி முடிவு செய்தார்.

- Advertisement -

அப்போது என்னிடம் வந்த தோனி ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்குவது குறித்து பேசினார். அவருடைய முடிவு எனக்கும் பிடித்திருந்தது நாங்கள் முதல் போட்டியிலேயே 100 என்ற அடித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தோம்.

இதையும் படிங்க : மழை காரணமாக மாபெரும் அவமானத்தில் இருந்து தப்பிய பாகிஸ்தான் அணி – இருந்தாலும் மோசமான சாதனை

அதன் பின்னர் நானும் ரோகித்தும் பத்து ஆண்டுகள் ஒன்றாக இணைந்து விளையாடுவோம் என்று நினைக்கவில்லை. ஆனால் அன்று தோனி எடுத்த முடிவுதான் நானும் ரோகித் சர்மாவும் பின்னாளில் மிகச் சிறந்த துவக்க வீரர்களாக மாற காரணமாக அமைந்தது என ஷிகர் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement