டி20 உலக கோப்பை 2022 : வெற்றியாளருக்கு பரிசு எத்தனை கோடிகள்? – வெளியான முழு பரிசு பட்டியல் இதோ

ICC T20 World Cup
- Advertisement -

உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. என்ன தான் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடர்கள் உலகம் முழுவதிலும் நடைபெற்றாலும் அதற்கு முன்னோடியாக கடந்த 2007இல் முதல் முறையாக துவங்கப்பட்டு டி20 கிரிக்கெட்டின் உலக சாம்பியனை தீர்மானிக்கும் தொடராக நடைபெறும் இத்தொடர் வரலாற்றில் 8வது முறையாக இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் நடப்புச் சாம்பியனாக ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க களமிறங்கிறது. அதனுடன் நிலையில் 2007க்குப்பின் கோப்பையை வெல்ல இந்தியாவும் உலகின் இதர அணிகளும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் பைனல் உட்பட மொத்தம் 45 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் அடிலெய்ட், பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன், ஹோபார்ட், கீலோங், பெர்த் போன்ற ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக உலகின் அனைத்து அணிகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. இதில் பங்கேற்கும் 16 அணிகளில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் இடம் பிடித்துள்ள டாப் 8 அணிகள் ஏற்கனவே முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 4 இடங்களில் விளையாடுவதற்காக தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

- Advertisement -

பரிசுதொகை அறிவிப்பு:
அந்த 8 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. அந்த வகையில் தகுதிச் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. அதை தொடர்ந்து அக்டோபர் 22 முதல் துவங்கும் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

அதை தொடர்ந்து உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த வகையில் நவம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறும் சூப்பர் 12 சுற்றின் முடிவில் 2 பிரிவுகளிலும் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. அதை தொடர்ந்து நடைபெறும் அரை இறுதி சுற்றில் வெற்றி பெறும் 2 அணிகள் நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

இப்படி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரில் வழங்கப்படும் பரிசுத் தொகை பற்றிய முழு விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.
1. அதன் படி இந்த உலகக் கோப்பையின் மொத்த பரிசு தொகை 5.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். இது இந்திய ரூபாயில் சுமார் 13.05 கோடிகளாகும்.

2. இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியடையும் அணிக்கு ரன்னர் அப் மெடல் மற்றும் 6.53 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் அரையிறுதி சுற்று வரை வந்து தோல்வி பெறும் 2 அணிகளுக்கு தலா 400,000 டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் தலா 3.27 கோடிகள் பரிசாக கொடுக்கப்படும்.

- Advertisement -

3. அத்துடன் சூப்பர் 12 சுற்றில் தோல்வியடைந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 70,000 அமெரிக்க டாலர்கள் அதாவது 57.8 லட்சங்கள் பரிசாக கொடுக்கப்பட உள்ளது. அதுபோக கடந்த வருடத்தைப் போலவே சூப்பர் 12 சுற்றில் நடைபெறும் 30 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்யும் அணிகளுக்கு ஒவ்வொரு வெற்றிக்கும் பரிசாக தலா 32.62 லட்சங்கள் கொடுக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவால் இந்திய அணிக்கு பெரிய சிக்கல் இருக்கு. மறந்துடாதீங்க – எச்சரித்த ஆஷிஷ் நெஹ்ரா

4. அது போக தகுதி சுற்று எனப்படும் முதல் சுற்றில் வெற்றியை பதிவு செய்யும் அணிகளுக்கு ஒவ்வொரு வெற்றிக்கும் பரிசாக 32.62 லட்சங்கள் கொடுக்கப்பட உள்ளது. அதே சமயம் முதல் சுற்றுடன் தோற்று வெளியேறும் அணிகளுக்கும் தலா 32.62 லட்சங்கள் பரிசளிக்கப்பட உள்ளது.

Advertisement