- Advertisement -
ஐ.பி.எல்

ரிஸ்க்னு தெரியும்.. ஆனா இதுதான் என் கேம்.. சி.எஸ்.கேவை வீழ்த்திய பின்னர் ஆட்டநாயகன் – பிரியான்ஷ் ஆர்யா பேட்டி

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சி.எஸ்.கே அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது.

என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு இதுவே காரணம் : பிரியான்ஷ் ஆர்யா

சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 73 ரன்களையும், ஷிவம் துபே 45 ரன்களையும் குவித்தனர். பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 43 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

அதேவேளையில் இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக விளையாடிய துவக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 39 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை அளித்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது அதிரடியான ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் பிரியான்ஷ் ஆர்யா கூறியதாவது : நான் சிறுவயது முதலிலேயே இதுபோன்ற அதிரடியான ஆட்டத்தை தான் விளையாடி வருகிறேன்.

இதன் காரணமாக நான் எப்போது விளையாடினாலும் என்னுடைய அணிக்கு எனது ஆட்டம் பலமாக இருந்து வருகிறது. முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடுவது எனக்கு பிடிக்கும். இதில் ரிஸ்க் இருக்கிறது என்பது உண்மைதான் ஆனாலும் நான் என்னுடைய திறன் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். அதன் காரணமாகவே என்னால் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட முடிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை சேப்பாக்கத்தில் வைத்து வீழ்த்த இந்த 2 பேர் தான் காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் அனுபவ பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனாலும் என்னுடைய திறன் மீது நம்பிக்கை வைத்து நான் அவர்களை எதிர்த்து அதிரடியாக விளையாடி வருகிறேன். ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக நிறைய பயிற்சியும் மேற்கொள்கிறேன். அந்த பயிற்சிதான் என்னுடைய பேட்டிங்கில் கூடுதல் பலத்தையும் அளிக்கிறது என பிரியான்ஷ் ஆர்யா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -