சி.எஸ்.கேவை சிதறடித்து சதமடித்த 24 வயது பஞ்சாப் வீரர்.. யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? – சுவாரசிய தகவல் இதோ

Priyansh Arya
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று சண்டிகார் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் போது முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 219 ரன்களை குவித்தது. பின்னர் அடுத்ததாக 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.கே அணி 201 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 18 வித்தியாசத்தில் பஞ்சாப் அணியானது அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

சி.எஸ்கேவை சிதறடித்து பஞ்சாப் வீரர்.. யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? :

இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 103 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த போட்டியின் போது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்து 39 பந்துகளில் சதம் அடித்த இவர் இந்திய வீரர்களின் சார்பாக ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

24 வயதான இவர் தான் விளையாடிய நான்காவது போட்டியிலேயே அதுவும் பலம் வாய்ந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த 24 வயது வீரரான பிரியான்ஷ் ஆர்யா யார்? என்பது குறித்த சில சுவாரஸ்ய தகவலை தற்போது நாம் இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் டெல்லியை பூர்வீகமாக கொண்ட பிரியான்ஷ் ஆர்யா தனது சிறுவயதில் விராட் கோலியை தனது முன்னோடியாக நினைத்து கிரிக்கெட் விளையாட துவங்கியுள்ளார்.

தொடர்ந்து தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த அவர் 2024 டெல்லி பிரீமியர் லீக்கில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 198 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 67 சராசரியுடன் 608 ரன்களை குவித்து அசத்தினார். அந்த தொடரில் 2 சதங்களையும் அடித்திருந்தார். அது தவிர்த்து டெல்லி உள்ளூர் அணிக்காக விளையாடிய அவர் மனன் பரத்வாஜ் என்கிற பவுலருக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து தனது ஹிட்டிங் திறமையை நிரூபித்திருந்தார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி சையத் முஷ்டாக் அலி தொடரிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி சார்பாக அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார். இப்படி தொடர்ச்சியாக தனது அதிரடியால் மிரட்டி வந்த இவரை 30 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலையில் இருந்து 3 கோடியே 80 லட்சம் வரை சென்று பஞ்சாப் அணி அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்திருந்தது. அந்த வகையிலே அவர் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி தனது நாலாவது போட்டியில் தற்போது சதம் அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

இதையும் படிங்க : அதைப் பற்றி கவலைப்படாம சிஎஸ்கேவை.. அடித்து நொறுக்கமாறு ஸ்ரேயாஸ், நேஹல் தான் சொன்னாங்க.. ஆர்யா பேட்டி

ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பேசியிருந்த பிரயான்ஷ் ஆர்யா கூறுகையில் : தான் ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்புவதாகும், விராட் கோலி தான் என்னுடைய ரோல் மாடல் என்றும் அவருடன் இணைந்து விளையாட ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்த வேளையில் அவர் தற்போது பஞ்சாப் அணியில் இடம் பிடித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement