ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற 22வது போட்டியில் சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. முள்ளான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 220 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக 24 வயது இளம் வீரர் பிரியான்ஸ் ஆர்யா சென்னை அணியை அடித்து நொறுக்கி 103 (42) ரன்கள் விளாசினார்.
அதன் வாயிலாக தனது அறிமுக ஐபிஎல் தொடரிலேயே சதத்தை அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்தார். அவருடன் சசாங் சிங் 52*, மார்கோ யான்சென் 34* ரன்கள் எடுத்து ஃபினிஷிங் கொடுத்தனர். அடுத்ததாக விளையாடிய சென்னை மீண்டும் தடுமாற்றமாகவே விளையாடி 20 ஓவரில் 201-5 ரன்கள் மட்டுமே எடுத்து 4வது தோல்வியை சந்தித்தது.
ஆட்டநாயகன் ஆர்யா:
அதிகபட்சமாக ரச்சின் 36, கான்வே 69*, சிவம் துபே 42, தோனி 27 ரன்கள் எடுத்த போதிலும் யாருமே ஃபினிஷிங் செய்யவில்லை. அதனால் மூன்றாவது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதத்தை அடித்து முக்கிய பங்காற்றிய ஆர்யா ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் விக்கெட் போனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் விளையாடுமாறு கேப்டன் ஸ்ரேயாஸ் தமக்கு ஆதரவு கொடுத்ததாக பிரியான்ஸ் கூறியுள்ளார். மேலும் மிடில் ஆடரில் சிங்கிள் டபுள் எடுக்காமல் அடித்து நொறுக்குமாறு சக வீரர் நேஹல் உத்வேகம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உலகிற்கு வெளியே இருப்பது போல் உணர்கிறேன்”
இதான் என்னோட பேட்டிங்:
“மிகவும் மகிழ்ச்சி. அதே சமயம் இன்னும் என்னுடைய அணிக்காக வெற்றியில் அதிகம் பங்காற்ற விரும்புகிறேன். இது தான் என்னுடைய பேட்டிங் செய்யும் வழியாகும். அதிரடியாக பேட்டிங் செய்யும் நோக்கத்துடன் விளையாடுமாறு ஸ்ரேயாஸ் பைய்யா சொன்னார். அவருடைய ஆதரவால் ஒருவேளை நான் அவுட்டானாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதன் காரணமாக எனது மனதில் இருப்பதற்கு தகுந்தார் போல் விளையாட விரும்பினேன்”
இதையும் படிங்க: இதான் பஞ்சாப் டெம்ப்ளேட்.. ஆர்ச்சரை ஃபேஸ் பண்ணாதே ஆர்யா சதத்துக்கு காரணம்.. கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டி
“அதே சமயம் சூழ்நிலைக்கு தகுந்தார் போலும் விளையாட விரும்பினேன். நேஹல் வதேரா வந்த போது சிங்கிள், டபுள் ரன்களை எடுப்பது பற்றி சிந்தித்தேன். ஆனால் உனது உள்ளுணர்வுகளைப் பின்பற்றி தொடர்ந்து இதே வழியில் விளையாடு என்று அவர் என்னிடம் சொன்னார். அனைத்து பவுலர்களும் நன்றாக பவுலிங் செய்தனர். அதனால் யார் வேண்டுமானாலும் எனக்கு பிரச்சனையைக் கொடுக்கலாம் என்று நினைத்தேன்” எனக் கூறினார்.



