தோனியா ? கோலியா ? இவரிடம் இருந்தே நான் கிரிக்கெட்டில் பல விடயங்களை கற்றுக்கொண்டேன் – மனம்திறந்த பிரியம் கார்க்

Garg
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தில் சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். மேலும் helo ஆப்பின் மூலமும் நேரலையில் பல விடயங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அந்தவகையில் நேற்று #HeloCric ன் சிறப்பு நேரலையில் இந்திய யு19 அணியின் கேப்டன் பிரியம் கார்க் கலந்துகொண்டார். அதில் அவர் வெளியிட்ட சில பிரத்யேக தகவல்கள்.

priyam-garg

- Advertisement -

– இந்த ஊரடங்கு நேரத்தில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறேன்.

– இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்த உடற்பயிற்சிகளை தினந்தோறும் பூங்காவில் செய்து வருகிறேன்.

– தினந்தோறும் மதியவேளையில் 1 மணி நேரம் தூங்குகிறேன். மேலும் மாலை 3 மணிக்கு மேல் தியானம் செய்கிறேன்.

- Advertisement -

– வாரம் மூன்று முறை யோகா செய்கிறேன்.

– இளம் வீரர்களுக்கு சிறந்த மேடையாக உள்ளது டி20 லீக் தொடர்.

- Advertisement -

கேள்வி : கம்மின்ஸ் பந்துவீச்சை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?

பதில் : என்னை பொறுத்தவரை ஒரு வேகப்பந்துவீச்சாளரை எதிர்கொள்ளும் வாய்ப்பு அது, அவர் யார் என்பது எனக்கு கவலையில்லை. என்னை வளர்த்துகொள்ள அது ஒரு வாய்ப்பு.

- Advertisement -

கேள்வி : நீங்கள் எந்தவொரு குறிப்பிட்ட அணியிலாவது இணைந்து விளையாட விரும்புகிறீர்களா?

பதில் : இல்லை. நான் தற்போதுள்ள ஹைதராபாத் அணியே எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. என்னுடைய பகுதியிலிருந்து அந்த அணியில் ஒருவர் விளையாடுகிறார்.

கேள்வி : எந்த வரிசையில் பேட் செய்ய விரும்புகிறீர்கள்?

பதில் : அது அணி நிர்வாகத்தின் முடிவு, எனக்கு பிடித்த வரிசை 4

கேள்வி : உங்களை தவிர உங்கள் U19 அணியில் சிறந்த வீரர் யார்?

பதில் : அனைவரும் சிறந்த வீரர்கள், அனைவரும் தங்களின் 100% உழைப்பை தருகிறார்கள்.

கேள்வி : டிராவிட்டை பற்றி?

பதில் : அனைவருக்கும் ஒரு முன்னோடி வீரர் இருப்பார். ஒழுக்கம், பொறுமை மற்றும் உழைப்பு போன்ற பலவற்றை அவரிடமிருந்து நான் கற்றுகொண்டேன். அவர் எப்பொழுதும் “உங்களை நீங்கள் நம்புங்கள்” என்று சொல்லி கொண்டிருப்பார்.

கேள்வி : ரோல் மாடல் யார்?

பதில் : சச்சின். அவரிடமிருந்து நிறைய கற்றுகொண்டேன். ஆனால், இதுவரை அவரை சந்தித்தது இல்லை.

கேள்வி : யு19 தோல்வியை பற்றி?

பதில் : அது ஒரு மோசமான நாள். நாங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்பினோம். எனினும் எங்கள் மன உறுதியை வலுபடுத்த அது உதவும்.

கேள்வி : தோனியா?கோலியா?

Kohli

பதில் : தோனி

கேள்வி : பணமா?மரியாதையா?

பதில் : மரியாதை

கேள்வி : பிடித்த உணவு இந்தியன்?சைனிஸ்?இத்தாலியன்?

பதில் : இந்திய உணவுகள்

Advertisement