
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21 ஆம் தேதி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஏற்கனவே ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறியதால் தற்போது துவக்க வீரராக யார் களம் இறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருபக்கம் மாயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி வருவதால் அவர் உறுதியாகி நிலையில் மற்றொரு பக்கத்தில் ப்ரித்வி ஷாவுக்கும், கில் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் 2 அரைசதம், ஒரு சதம் மற்றும் ஒரு இரட்டை சதம் அடித்து மிரட்டலாக விளையாடி உள்ளார். ஆனால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை.
ஆனால் ப்ரித்வி ஷா ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணிக்காக ஆடிய அனுபவம் உள்ளவர். அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். எனவே இம்முறை ரோகித் சர்மாவுக்கு பதிலாக ப்ரித்வி ஷாவே கோலியால் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் பயிற்சி போட்டியின் போது முதல் இன்னிங்சில் ஷா மற்றும் கில் இருவரும் டக் அவுட் ஆனார்கள். இது நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது ஆனால் அதற்கடுத்து இன்னிங்சில் பிரித்வி ஷா தாக்குபிடித்து 39 ரன்கள் அடிக்க கில் 8 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் ப்ரித்வி ஷா கில்லுக்கு ஒரு படி மேலே உள்ளதால் அவரே துவக்க வீரராக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.