என் திறமை மீது சந்தேகம் இருப்பவர்களுக்கு எனது பேட்டிங் மூலம் பதிலளிப்பேன் – சவால் விட்ட இளம்வீரர்

Shaw
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் டெஸ்ட் அணியின் அறிமுக வீரராக களமிறங்கியவர் இளம்வீரர் ப்ரித்வி ஷா. மேலும் அந்த அறிமுக தொடரிலேயே சதம் அடித்து தனது வருகையை கிரிக்கெட் உலகிற்கு படுஅட்டகாசமாக தெரிவித்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு சென்ற அவர் பயிற்சி போட்டியின் போது காயமடைந்து அந்த தொடரில் விளையாடமுடியாமல் பாதியிலேயே இந்தியா திரும்பினார். தொடர்ச்சியாக அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு அதுவே முதல் சறுக்கலாக அமைந்தது.

Shaw

- Advertisement -

அதன்பின்னர் மீண்டும் உடல்நலம் தேறி அணிக்குள் நுழையலாம் என்று எதிர்பார்த்த போது ஊக்க மருந்து பிரச்சனையில் சிக்கி 8 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடைசெய்யப்பட்டார். அந்த தடை முடிந்து ஒருவழையாக நியூசிலாந்து சென்ற இந்திய அணியில் தவானுக்கு பதிலாக இடம்பிடித்த அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். அதன்பிறகு மீண்டும் அவருக்கு நம்பிக்கை இந்நேரத்தில் கொரோனா காரணமாக விளையாட முடியாமல் அடுத்த சிக்கலை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்த ப்ரித்வி ஷா கூறுகையில் : மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்பினேன். எல்லாம் நல்ல விதமாக சென்று கொண்டிருந்தது. டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடிக் கொண்டிருந்தேன். திடிரென கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எனது உத்வேகம் குறைந்தது. தற்போது நாட்டின் நலன் தான் முக்கியம், அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்போம்.

Shaw

விரைவில் இதில் இருந்து மீண்டு வருவோம், இந்த பிரச்சனை இல்லாவிட்டால் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருப்பேன். கிரிக்கெட்டை நான் தற்போது தவிர விடுகிறேன், கிரிக்கெட் நமது கலாச்சாரத்தில் ஒன்றாகிவிட்டது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை வென்றதும் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசியது ஆகியவை எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். அதே போல் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 8 மாதம் தடை காலத்தில் இருந்தேன். அது எனக்கு மோசமான தருணம் ஆகும்.

- Advertisement -

ஒரு விளையாட்டு வீரராக எந்த மருந்து சாப்பிட்டாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். சிறிய மருந்து என்றாலும் மருத்துவரிடம் அணுகிப் அதற்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், நாம் ஒரு மருந்து உட்கொள்ளும் போது அது தடை செய்யப்பட்ட மருந்தில் இருக்கிறதா என்பதை டாக்டரிடம் கேட்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருமல் குணமாக அதற்காக நான் ஒரு மருந்து சாப்பிட்டேன். ஆனால், அது தடை செய்யப்பட்ட மருந்து பட்டியலில் இருந்தது எனக்கு தெரியாது. இந்தத் தவறில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

Shaw

கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த இந்த காலகட்டம் மிகவும் கடினமானது. மன உளைச்சலுக்கு உள்ளானேன். இது போன்று வேறு எந்த ஒரு வீரருக்கும் நடக்க கூடாது. நாம் எப்போதும் அனைவரையும் முழுவதுமாக திருப்திப்படுத்த முடியாது, நமது ஆட்டம் மீதான விமர்சனங்கள் விளையாட்டின் ஒரு அங்கம், அதனை நான் எனது சிறப்பான பேட்டிங் மூலம் பதிலளிப்பேன். இதனை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி அந்த இடத்தை பிடிப்பேன் என்று கூறியுள்ளார் பிரித்திவ் ஷா.

Advertisement