சச்சின் சொன்னதிலிருந்து ஒரு விஷயத்தை மாற்றாமல் ஆடிவருகிறேன். நிச்சயம் அவரை போன்றே நான் பெரிய ஆளாக வருவேன் – இளம்வீரர் நம்பிக்கை

Shaw
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் படைக்காத சாதனையே இல்லை என்று கூறும் அளவிற்கு பேட்டிங்கில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளார். சுமார் 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள சச்சின் கிரிக்கெட்டின் கடவுளாக இன்றளவும் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். அதிலும் குறிப்பாக இந்தியாவில் வளரும் இளைஞர்கள் பலருக்கு சச்சினே கிரிக்கெட்டின் முன்னோடியாக திகழ்கிறார்.

sachin6

- Advertisement -

அவரை பின்பற்றி பல கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு வந்துள்ளனர். அந்த வகையில் சச்சினை தனது ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு அணியில் களமிறங்கியுள்ள ப்ரித்வி ஷா சச்சினை போன்றே இளம் வயதில் அதாவது 18 வயதில் இந்திய அணிக்கு இணைந்து அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அறிமுகப் போட்டியில் சதமடித்து தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட ஆரம்பித்த அவர் பல சிக்கல்களுக்கு பிறகு அணியில் இணைந்துள்ளார்.

ப்ரித்வி ஷா அறிமுகமானத்திலிருந்து அவரை சச்சினுடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்தனர். இதுகுறித்து தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் பேசிய ப்ரித்வி ஷா கூறுகையில் : சச்சின் மீது எனக்கு ஏகப்பட்ட மரியாதை உள்ளது. அவரே எனது ரோல்மாடல் என்னுடைய பேட்டிங்கில் அவரது தாக்கம் அதிகமாக காணப்படும்.

Shaw

நான் எட்டு வயதில் இருக்கும் போது அவரை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது எனது இயல்பான ஆட்டத்தை தொடர்ந்து என்னை ஆடச் சொன்னார். மைதானத்திற்கு உள்ளேயும் சரி, வெளியிலும் சரி அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார். பேட்டை பிடிக்கும் போது என்னுடைய கீழ் கைக்கு அதிகம் பலம் இருக்கும்படி நான் க்ரிப்பை பிடிப்பேன். அதனை மாற்ற வேண்டாம் என்றும் சச்சின் என்னிடம் கூறினார்.

- Advertisement -

பயிற்சியாளர்கள் பலமுறை அதனை மாற்றும்படி கூறினர் ஆனால் நான் சச்சின் சொன்னதன் பேரில் நான் இதுவரை அதை மாற்ற வில்லை எப்போதும் அவர் கூறியபடியே கீழே இருக்கும் கையில் க்ரிபை பலமாக பிடித்து விளையாடுகிறேன். அவரோடு என்னை ஒப்பிடும்போது அழுத்தத்தை உணர்கிறேன். ஆனால் அதனை சவாலாக எடுத்துக் கொண்டு தற்போது விளையாடி வருகிறேன் நான் அவரைப் போல விளையாட முயற்சிக்கிறேன். சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் அவரைப் பின்பற்றி கிரிக்கெட்டின் முன்னேறுவது எனக்கு மகிழ்ச்சியை என்று ப்ரித்வி ஷா தெரிவித்துள்ளார்.

Prithvi-Shaw

மேலும் சௌரவ் கங்குலி பயிற்சியின் கீழ் பெற்ற அனுபவத்தை குறித்து பேசிய ப்ரித்வி ஷா கூறுகையில் : நிறைய அனுபவங்கள் அவரின் பயிற்சியில் கிடைத்தன. அவர் நிறைய உதவினார் இளைஞர்களை எப்படி ஊக்குவிப்பது என்பது அவருக்கு தெரியும். அவரது பயிற்சியின் கீழ் செயல்பட்டது மிகச்சிறந்த அனுபவம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement