கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்த ப்ரித்வி ஷா தன்னுடைய சிறப்பான கேப்டன்சி மற்றும் அசத்தலான பேட்டிங் என மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் 18 வயதிலேயே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகவும் வாய்ப்பு கிடைத்தது.
ப்ரித்வி ஷா வாங்கப்படமால் போக என்ன காரணம் :
அந்த வகையில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அவர் அடுத்த சச்சினாக பலராலும் பாராட்டப்பட்டார். வெகு விரைவாக புகழின் உச்சத்தை எட்டிய அவர் அடுத்த சில ஆண்டுகளிலேயே தற்போது காணாமல் போகும் அளவிற்கு மோசமான நிலையை சந்தித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஊக்க மருந்து சர்ச்சையில் முதல் முறையாக சிக்கிய அவர் 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டார். அந்த ஆறு மாத தடைக்கு பின்னர் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப நினைத்தாலும் அதன் பின்னர் எப்போதுமே அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதோடு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவரை தேர்வுக்குழுவும் கண்டு கொள்ளவில்லை.
பின்னர் படிப்படியாக இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணிக்காக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை அடிப்படை விலையான 75 லட்சத்துக்கு கூட எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
இப்படி பிரித்விஷா ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போனது பலரது மத்தியில் ஆச்சரியத்தை அளித்தாலும் அதற்கு அவரது பேட்டிங் ஃபார்ம் மட்டும் காரணம் அல்ல என்று தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அவரது பிட்னஸ் மற்றும் பார்ம் போன்ற சில காரணங்கள் இருந்தாலும் ஒழுக்கமின்மை மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கம்ப்ளீட் பேக்கேஜ்.. இதனால தான் என்னை பும்ரா கோல்டன் டக் அவுட்டாக்கிடாரு.. ஸ்மித் பாராட்டு
ஏனெனில் பயிற்சிக்கு ஒழுங்காக வராதது, வீரர்களுடன் அணி நிர்வாகம் அமைக்கும் மீட்டிங்க்கு வராதது, பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலை பின்பற்றாதது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கின்றன. இதன் காரணமாகவே மும்பை ரஞ்சி அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் அதுபோன்ற சில காரணங்களை ஐபிஎல் உரிமையாளர்களின் கவனத்திற்கு சென்றதாலே அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.