கம்ப்ளீட் பேக்கேஜ்.. இதனால தான் என்னை பும்ரா கோல்டன் டக் அவுட்டாக்கிடாரு.. ஸ்மித் பாராட்டு

- Advertisement -

பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக அந்த போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவை கேப்டனாக வழி நடத்தினார்.

அப்போட்டியில் 150க்கு ஆல் அவுட்டான இந்தியாவுக்கு பின்னர் அபாரமாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 104க்கு ஆல் அவுட்டாக்க முக்கிய பங்காற்றினார். அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸிலும் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித்தை கோல்டன் டக் அவுட்டாக்கி பும்ரா தெறிக்க விட்டார்.

- Advertisement -

தெறிக்க விட்ட பும்ரா:

அதன் வாயிலாக ஸ்மித்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் கோல்டன் டக் அவுட்டாக்கிய முதல் ஆசிய வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்தார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை வித்தியாசமான பவுலிங் ஆக்சன் காரணமாக எதிர்கொள்வதாக கடினமாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே அவர் பந்தை வெளியிடுவதால் அதை கணிப்பது கடினமாக இருப்பதாகவும் ஸ்மித் கூறியுள்ளார்.

முதல் போட்டியில் அவரிடம் டக் அவுட்டானது பற்றி ஸ்மித் பேசியது பின்வருமாறு. “அவர் ஓடி வருவதே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. அவர் மற்ற பவுலர்களை விட வித்தியாசமாக ஓடி வருகிறார். அவருடைய ஆக்சனும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. இப்போது அவரை கொஞ்சம் நான் போதுமான அளவுக்கு எதிர்கொண்டுள்ளேன்”

- Advertisement -

ஸ்மித் பாராட்டு:

“ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக எதிர்கொள்ளும் போது அவருக்கு எதிராக ஃபார்முக்கு வர சில பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் மற்ற பவுலர்களை விட கொஞ்சம் பந்தை முன்னதாக ரிலீஸ் செய்கிறார். அதனால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அவருடைய ஆக்சன் காரணமாக உங்களை நோக்கி வேகமாக வருகிறது. இது போக அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்கிறார்”

இதையும் படிங்க: 11 பேரும் பவுலர்ன்னா எப்படி.. 2002இல் சௌரவ் கங்குலி செய்ததை செய்த டெல்லி அணி.. உலக சாதனை

“அவரால் பந்தின் வேகத்தை குறைக்க முடிகிறது. ரிவர்ஸ் செய்ய முடிகிறது. மெதுவாக வீச முடிகிறது. அந்த வகையில் அவர் அனைத்து பந்துகளையும் பேசக்கூடிய கம்ப்ளீட் பேக்கேஜ் போன்ற பவுலர்” என்று கூறினார். அப்படி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பும்ரா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement