11 பேரும் பவுலர்ன்னா எப்படி.. 2002இல் சௌரவ் கங்குலி செய்ததை செய்த டெல்லி அணி.. உலக சாதனை

- Advertisement -

சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2024 டி20 உள்ளூர் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் நவம்பர் 29ஆம் தேதி மும்பையில் இருக்கும் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் டெல்லி மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மணிப்பூர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை அடுத்து களமிறங்கிய மணிப்பூர் அணி 20 ஓவரில் மிகவும் தடுமாற்றமாக விளையாடி 120-8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரெக்ஸ் சிங் 23, அஹ்மத் சிங் 32 ரன்கள் எடுத்தார்கள். டெல்லி அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷ் தியாகி 2, டிக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். சொல்லப்போனால் அந்த அணியின் 11 வீரர்களும் பவுலிங் செய்த வினோதம் இப்போட்டியில் அரங்கேறியது.

- Advertisement -

11 பவுலர்கள்:

பொதுவாக ஒரு டி20 போட்டியில் 5 பவுலர்கள் அதிகபட்சமாக 4 ஓவர்களை வீசுவது வழக்கம். அதில் ஓரிரு பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினால் அந்த அணியின் கேப்டன் எக்ஸ்ட்ரா பவுலர்களை பயன்படுத்துவது வழக்கமாகும். ஆனால் இந்த போட்டியில் திக்வேஷ் ரதி 3, மயங் ராவத் 3, ஹர்ஷ் தியாகி 3 ஓவர்களை வீசினார்கள். ஆயுஷ் சிங், அகில் சௌத்ரி, கேப்டன் ஆயுஷ் படோனி தலா 2 ஓவர்களை வீசினார்கள்.

அது போக ஆரியான் ராணா, ஹிம்மத் சிங், பிரியான்ஸ் ஆர்யா, யாஷ் துள், அனுஜ் ராவத் தலா 1 ஓவர் வீசினார்கள். அந்த வகையில் டெல்லி அணியின் 11 வீரர்களும் சேர்ந்து இந்த போட்டியில் மணிப்பூருக்கு எதிராக 20 ஓவர்கள் வீசி முடித்தார்கள். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 11 பவுலர்களை பயன்படுத்திய முதல் அணி என்ற உலக சாதனையை டெல்லி படைத்துள்ளது.

- Advertisement -

கங்குலி போல:

இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2002ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இந்தியா 11 வீரர்களை பயன்படுத்தி பந்து வீசியது. அப்போட்டியில் கேப்டன் சௌரவ் கங்குலி தாம் உட்பட இந்திய அணியின் 11 வீரர்களையும் பந்து வீச வைத்தார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அதே போன்ற நிகழ்வை டெல்லி தான் தற்போது செய்துள்ளது.

இதையும் படிங்க: அவர் தான் அஸ்வின், ஜடேஜாவை பெஞ்சில் உட்கார வெச்சாரு.. 2வது டெஸ்டில் கில் விளையாடுவாரா? நாயர் பேட்டி

இறுதியில் 121 ரன்களை துரத்திய டெல்லிக்கு யாஷ் துள் 59* (51), மயங் ராவத் 18 ரன்கள் குவித்தனர். அதனால் 18.3 ஓவரில் 124-6 ரன்கள் எடுத்த டெல்லி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மறுபுறம் 7 பவுலர்களை பயன்படுத்திய மணிப்பூர் அணிக்கு அதிகபட்சமாக கோன்தோஜம் 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement