அவர் தான் அஸ்வின், ஜடேஜாவை பெஞ்சில் உட்கார வெச்சாரு.. 2வது டெஸ்டில் கில் விளையாடுவாரா? நாயர் பேட்டி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற போராடி வருகிறது. முன்னதாக முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் அபாரமாக விளையாடி இந்தியா வெற்றி பெற்றது.

அவருடைய தலைமையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாட தேர்ந்தெடுக்கப்படாதது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த இருவரும் சேர்ந்து 850க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். மேலும் ஐசிசி தரவரிசையில் அவர்கள் உலகின் டாப் 2 ஆல் ரவுண்டர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

பெஞ்சில் அஸ்வின் – ஜடேஜா:

அப்படி இருந்தும் அவர்களை தேர்ந்தெடுக்காத இந்திய அணி வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்து வெற்றியும் கண்டது. இந்நிலையில் முதல் போட்டியில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் அவர்களை பெஞ்சில் அமர வைத்ததாக துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அணியின் நலனுக்காக அவர்கள் அதை நன்றாக எடுத்துக்கொண்டதாக அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.

மேலும் சுப்மன் கில் காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் இரண்டாவது போட்டியில் விளையாடுவது பற்றி விரைவில் முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நிலைமையை உணர்ந்து கொள்ளாத சீனியர்கள் இருந்தால் தான் கடினமாக இருக்கும். ஆனால் அணி முயற்சிக்கு விரும்பும் விஷயங்களை புரிந்து கொள்ளும் அஸ்வின் – ஜடேஜா போன்ற சீனியர்கள் இருக்கும் போது நீங்கள் முடிவெடுப்பது எளிது”

- Advertisement -

சுப்மன் கில் வாய்ப்பு:

“கௌதம் கம்பீர் பாய் என்ன நம்புகிறார் என்பதை எங்களுடைய அணி பின்பற்றுகிறது. அதன் படி அஸ்வின் மற்றும் ஜடேஜா இங்கே உள்ள இளம் வீரர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டுமே எங்களுடைய கலாச்சாரம் கவனம் செலுத்துவதாக கருதுகிறேன்”

இதையும் படிங்க: 23 வயசிலயே 30 கோடி.. வினோத் காம்ப்ளி மாதிரி பிரிதிவி கெட்டுப்போக இதான் காரணம்.. பர்வின் ஆம்ரே விமர்சனம்

“சுப்மன் கில் பேட்டிங் செய்கிறார். அவரை எங்களுடைய உடல் பயிற்சியாளர்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். இருப்பினும் அவருடைய சூழ்நிலை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் பேட்டிங் செய்யும் போது நன்றாக விளையாடுவதாக தெரிகிறது. எனவே அவரை கவனித்து பயிற்சி போட்டி நாளில் விளையாடுவது பற்றி தெரிவு செய்வோம்” என்று கூறினார். அந்த வகையில் வாஷிங்டன் சுந்தர் அடுத்த போட்டிகளிலும் விளையாடுவார் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

Advertisement