23 வயசிலயே 30 கோடி.. வினோத் காம்ப்ளி மாதிரி பிரிதிவி கெட்டுப்போக இதான் காரணம்.. பர்வின் ஆம்ரே விமர்சனம்

- Advertisement -

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் பிரிதிவி ஷா 2025 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. 2018 அண்டர்-19 உலகக்கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதமடித்தார். அதனால் பெரியளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் நாளடைவில் சுமாராக விளையாடியதால் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

அதே போல ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் தன்னுடைய ஃபிட்னஸை கடைப்பிடிக்கவில்லை. அதன் காரணமாக ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவரை தற்போது ஐபிஎல் அணிகளாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்ப்ளி போல பிரிதிவி ஷா திறமை இருந்தும் சரியாக பயன்படுத்தவில்லை என டெல்லி அணியின் பயிற்சியாளர் பர்வின் ஆம்ரே விமர்சித்துள்ளார்.

- Advertisement -

வினோத் காம்ப்ளி போல:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “3 வருடத்திற்கு முன் வினோத் காம்ப்ளியை நான் எடுத்துக்காட்டாக கொடுத்திருந்தேன். அவருடைய சரிவை நான் மிகவும் நெருக்கமாக பார்த்துள்ளேன். இப்போதுள்ள தலைமுறைக்கு அதை சொல்லிக் கொடுப்பது எளிதல்ல. டெல்லி அணி தக்க வைத்ததால் பிரிதிவி 30 – 40 கோடிகளை 23 வயதிலேயே சம்பாதித்திருப்பார்”

“ஐஐஎம் பட்டதாரி கூட அது போன்ற பணத்தை சம்பாதித்திருப்பாரா? அவ்வளவு இளம் வயதிலேயே நீங்கள் இவ்வளவு சம்பாதித்தால் கவனத்தை இழப்பீர்கள். பணத்தையும் நண்பர்களையும் எப்படி கையாண்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது முக்கியம். இன்று கூட அவரால் ஐபிஎல் தொடரில் 30 பந்தில் அரை சதம் அடிக்க முடியும்”

- Advertisement -

பிரிதிவி ஏமாற்றம்:

“ஆனால் பணம் மற்றும் ஐபிஎல் தொடரால் ஏற்பட்ட பக்க விளைவுகளை அவரால் சமாளிக்க முடியாததால் இப்படி நடந்திருக்கலாம். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு. அவருக்கு நடந்த விஷயம் மற்ற வீரர்களுக்கு நடக்கக்கூடாது. திறமை மட்டும் உங்களை மேலே எடுத்து வராது. கட்டுப்பாடு, உறுதி, அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும் முக்கியம்”

இதையும் படிங்க: நினைச்சே பாக்கல.. 40 வருசத்துல இந்தியாவை தவிர பாகிஸ்தான் மாதிரி ஆசிய அணிகள் இதை செய்யல.. வாசிம் அக்ரம்

“டெல்லி அணி முதல் முறையாக 1.20 கோடிக்கு வாங்கிய போது அவர் அண்டர்-19 இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றிருந்தார். அடுத்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிராக 55 பந்தில் அவர் 99 ரன்கள் குவித்தார். அதனால் டெல்லி அணி நம்பி அவரை 6 வருடம் தக்க வைத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் அவர் டெல்லி அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். இந்த பின்னடைவு அவருக்கு விழித்துக் கொள்ளும் நேரமாகும். 25 வயதுமே மற்றும் நிரம்பிய அவர் அசத்துவதற்கு இன்னும் காலங்கள் உண்டு” என்று கூறினார்

Advertisement