எனக்கு 8 வயசுல இருந்து இவரு ரொம்ப க்ளோஸ். எனக்கு எல்லாமே அவர்தான் – மனம்திறந்த ப்ரித்வி ஷா

- Advertisement -

தற்போது இந்திய அணியின் துவக்க வீரர்கள் போட்டியில் இருப்பவர் இளம் வீரர் பிரித்திவி ஷா. இவர் மும்பையை சேர்ந்தவர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் கேப்டனாக இருந்து கோப்பையை கைப்பற்றி கொடுத்தவர். மும்பையை சேர்ந்தவ இளம் வீர்ர் என்பதினால் சச்சினின் வழிகாட்டுதலை அவர் தொடர்ந்து பெற்று வருகிறார். மேலும் இளம் வயதிலேயே தனது அபாரமான பேட்டிங் திறமை மூலம் அவரை கவர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Prithvi_Shaw

- Advertisement -

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் பிரித்திவி. சமீபத்தில் ஒரு நேரலையில் பேசிய அவர் கூறியதாவது : நான் முதன்முதலில் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த போது எனக்கு வயது 8. அன்று முதல் இன்று வரை அவர்தான் எனக்கு எல்லாமாகவும் இருந்து வருகிறார். அவர் எனது ஆசான்.

களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார் .தற்போதும் கூட நான் பயிற்சியில் ஈடுபடும் போதெல்லாம் ஈடுபடும் போதெல்லாம் அவர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதனை பார்க்க வருவார். என்னுடன் பேசி எனது பேட்டிங்கை சரி செய்து கொடுப்பார்.

Shaw

அவரது வழிகாட்டுதல் காரணமாகத்தான் தற்போது நான் இந்த இடம் வரை இந்த இடம் வரை வந்துள்ளேன். என்று கூறியுள்ளார். இதனை சச்சின் டெண்டுல்கரும் சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார். நான் பிரித்திவ் ஷாவுடன் நிறைய பேசியிருக்கிறேன். அவர் மிகச்சிறந்த திறமைசாலி. அவருக்கு உதவுவதில் எனக்கு மகிழ்ச்சி.

- Advertisement -

கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட்டிற்கு வெளியே உள்ள வாழ்க்கையையும் பற்றி அவரிடம் பேசுவேன் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். ப்ரித்வி ஷா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் அணியில் துவக்க வீரராக இடம் பிடித்தார். அதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்காக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Shaw

டெஸ்ட் தொடரின் துவக்கத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷா, ஒருநாள் தொடரில் அந்த அளவு சிறப்பான துவக்கத்தை அளிக்கவில்லை என்றாலும் இனிவரும் காலங்களில் இந்திய அணிக்கு முக்கிய பேட்ஸ்மேனாக இருப்பார் என்பது மட்டும் உறுதி.

Advertisement