சச்சின் செய்த ஒரு செயலால் நெகிழ்ந்த ப்ரித்வி ஷா. தந்தையர் தினத்தில் வெளியான தகவல் – விவரம் இதோ

Prithvi
- Advertisement -

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்றவர் ப்ரீத்தி ஷா. இவர் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் இடத்திற்கும் ஒருநாள் அணியின் துவக்க வீரர் இடத்திற்கும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது இவருக்கு 20 வயதாகிறது.

Prithvi

- Advertisement -

ஆனால், நாம் தற்போது அழிந்து இருக்கும் பெயர் சொல்லும் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்கள் பலரை ஐபிஎல் தொடரிலும் சர்வதேச தொடரிலும் அடித்து நொறுக்கி உள்ளார். இவர் கிரிக்கெட் வாழ்க்கை இப்போது தோன்றியது அல்ல. இவர் மூன்று வயதிலேயே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி விட்டார். இது குறித்து பல சுவாரசிய நிகழ்வுகளை பேசியுள்ளார் பிரித்திவ் ஷா.

தந்தையர் தினமான இன்று தனது தந்தை தனக்கு எவ்வாறு உதவினார் என்றும் பேசியுள்ளார். சிறுவயதில் நான் டென்னிஸ் பந்து கிரிக்கெட் பயிற்சி செய்தேன். அதனை அனைவரும் வேடிக்கை பார்ப்பார்கள். எனது தந்தை எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். நான் சிறுவயதில் கடைபிடித்த பல கிரிக்கெட் நுணுக்கங்களை தற்போதும் பயன்படுத்தி வருகிறேன்.

எனக்கு இயற்கையாகவே கிரிக்கெட் ஆடும் திறமை இருக்கிறது என்று என் தந்தை கருதினார். இதன் காரணமாக பலரைச் சந்தித்து மும்பை சென்று எனக்கு பயிற்சி கொடுக்க முடிவு செய்தார். மும்பைக்கு எங்களது குடும்பம் மாற்றலாகி வந்து பல பயிற்சியாளரை சந்தித்ததோம். நான் சிறுவனாக இருந்ததால் எனக்கு பலர் பயிற்சி கொடுக்க தயங்கினார்கள்.

- Advertisement -

ஒருவழியாக ஒரு முன்னாள் வீரர் ஒருவர் எனக்கு பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார். அப்போது நான் எட்டு வயது வயதில் பயிற்சி மேற்கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் எனது பயிற்சியை பார்த்துக்கொண்டிருந்தார். நான் நன்றாக ஆடுவதை பார்த்து என்னிடம் அருகில் வந்து என்னை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.

மேலும் எனக்கு ஒரு பேட்டை பரிசாக வழங்கினார் அந்த தருணத்தில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அந்த பேட்டை கொடுத்த பிறகு இதனை வைத்து நீ பல ஆயிரம் ரன்களை குவிக்க வேண்டும் என்று கூறினார். அப்போதிலிருந்தே எனக்கு புதிய உத்வேகம் பிறந்தது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார் பிரித்வி ஷா.

Advertisement