அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து பேசிய – குட்டி சேவாக் ப்ரித்வி ஷா

- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா 2018 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை தொடரை கேப்டனாக என்று அசத்தியவர். அதன் காரணமாகவே வெகு விரைவிலேயே தனது திறமையை அட்டகாசமாக உலகிற்கு வெளிக்காட்டிய அவர் ஐபிஎல் தொடரில் 2018-ஆம் ஆண்டே அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடியுள்ளார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

Prithvi-Shaw

- Advertisement -

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது பார்மில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அவர் அதிரடியாக விளையாடினாலும் பெரிய ரன் குவிப்புக்கு செல்ல முடியாமல் தவிப்பதால் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுப்பது கடினமாக உள்ளது. அவரது கரியர் ஆரம்பிக்கும்போது பதினெட்டு வயதிலேயே மிக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியில் அடுத்த குட்டி ஷேவாக் என்றெல்லாம் புகழப்பட்டார்.

அந்த அளவிற்கு தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு மேலாகவே இந்திய அணியில் வாய்ப்பு இன்றி தவித்து வரும் ப்ரித்வி ஷாவிற்கு இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலாவது வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போதுள்ள இந்திய அணியில் அவரை தாண்டியும் பல வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரை விட முன்னணியில் இருக்கும் வீரர்களுக்கே தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் மீண்டும் இணைவது குறித்து தற்போது பேசியுள்ள ப்ரித்வி ஷா அவரது கருத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதன்படி அயர்லாந்து அணிக்கு எதிராக தான் இடம் பெறாதது குறித்து பேசியுள்ள அவர் கூறுகையில் :

- Advertisement -

தற்போது நான் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்து விளையாட வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. என்னுடைய தற்போதைய மனநிலை கூறுவதெல்லாம் ரஞ்சி கோப்பையில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே. இதுமட்டுமே தற்போது என்னுடைய குறிக்கோளாக உள்ளது. நான் ரஞ்சி கோப்பையில் விளையாட ஆரம்பித்துவிட்டால் வெளியிலுள்ள விஷயங்களைப் பற்றி கவனம் செலுத்த மாட்டேன்.

இதையும் படிங்க : டி20 உ.கோ டீமில் அவரை எடுக்கக்கூடாது. மீண்டும் ஜடேஜாவை சீண்டிய சஞ்சய் மஞ்சரேக்கர் – ரசிகர்கள் கோவம்

இந்த தொடரை வெற்றிகரமாக முடித்த பின்னரே எனது அடுத்த நகர்வு குறித்து யோசிப்பேன். அதுவரை நான் தற்போது விளையாடி வரும் சூழ்நிலையை சந்தோஷமாக அனுபவித்து விளையாட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம் என ப்ரித்வி ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement