டி20 உ.கோ டீமில் அவரை எடுக்கக்கூடாது. மீண்டும் ஜடேஜாவை சீண்டிய சஞ்சய் மஞ்சரேக்கர் – ரசிகர்கள் கோவம்

Sanjay
- Advertisement -

கடந்த ஆண்டு விராட் கோலி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று பெரிதாகப் பேசப்பட்ட வேளையில் லீக் சுற்றுப் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அதன் பின்னர் தற்போது விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியுள்ளதால் ரோகித் சர்மா தலைமையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

Avesh-Khan

- Advertisement -

இதற்கு முன்னதாக தற்போது பலமான இந்திய அணியை உலக கோப்பை தொடருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது இந்திய அணியானது முழு பலத்துடன் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களை சேர்க்கலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சேர்க்கக்கூடாது என்று பகிரங்கமாக ஒரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் : யுஸ்வேந்திர சாஹல் தற்போது மிக அருமையான பார்மில் இருப்பதால் டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்பின்னருக்கான ஒரு இடத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார்.

sanjay 1

அதேபோன்று இரண்டாவது இடத்திற்காக அக்ஷர் பட்டேல், ரவிந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். ஆனால் இந்த மூன்று பேரில் என்னை பொறுத்தவரை அக்சர் பட்டேலுக்கு தான் வாய்ப்பு கொடுக்கவேண்டும். ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான். ஏனெனில் தற்போதெல்லாம் ஜடேஜாவின் பெயர் பவுலிங்கை விட பேட்டிங்கால் தான் அதிகம் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆனால் தற்போது இந்திய அணியில் பினிஷர்களாக ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் இருப்பதனால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் நிச்சயம் அக்சர் படேல் சேர்க்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். அவரது சர்ச்சையான கருத்து தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அவரை கேலி கிண்டலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க : தெருவோர கடையில் துணி விற்கும் பிரபல அம்பயர் – மொத்தமாக மாறிப்போன வாழ்க்கையின் பின்னணி இதோ

ஏனெனில் 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போதும் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தை குறைத்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அரையிறுதிப் போட்டியில் ஜடேஜாவின் அற்புதமான ஆட்டத்தால் மூக்கு உடைந்து போனார். ஆனால் அதனை எல்லாம் மறந்து மீண்டும் தற்போது ஜடேஜாவை அவர் குறைத்து பேசியுள்ளதன் காரணமாக ரசிகர்கள் மீண்டும் அவரை இணையத்தில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement