- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்க சொல்றத மட்டும் நம்பிடாதீங்க. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து – ப்ரித்வி ஷா வருத்தம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை முடிவடையும் வேளையில் அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் தென்னாப்பிரிக்க அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் நடைபெற்று வரும் டி20 அணியில் விளையாடும் முதன்மை வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணியே இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

அதில் சி.எஸ்.கே வீரர் முகேஷ் குமார், பெங்களூரு ராயல்ஸ் சேலன்ஞ்சர்ஸ் அணியை சேர்ந்த ராஜாத் பட்டிதார் போன்ற புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் ஏற்கனவே அறிமுகமாகி வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் பிரிதிவி ஷா இந்த ஒரு நாள் தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரித்திவி ஷா ஒரு ஸ்டோரி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

“வார்த்தைகளை நம்பாதீர்கள்”, “அவர்களின் செயல்பாடுகளை நம்புங்கள்”, “வார்த்தைகள் ஏன் அர்த்தம் மற்றது என்பதை செயல்களே” நிரூபிக்கும் என்று தனது விரக்தியை தெரிவித்துள்ளார். இதில் அவர் யாரை சுட்டிக்காட்டி இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்ற விவரம் தெரியவில்லை என்றாலும் தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியிலேயே அவர் இது போன்ற ஒரு கருத்தை பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : IND vs SA : இதற்காகவா 17 வருசம் காத்திருந்திங்க – பாபர் அசாமை கலாய்க்கும் ரசிகர்கள், என்ன நடந்தது

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய பிரித்திவி ஷா ஐந்து டெஸ்ட் போட்டிகள், 6 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் இந்திய அணிக்காக அவர் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by