- Advertisement -
ஐ.பி.எல்

2வது முறை.. வசமாக சிக்கிய கொல்கத்தா வீரர்.. 100% அபராதத்துடன் விளையாடுவதற்கு தடை விதித்த பிசிசிஐ

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற 47வது லீக் போட்டியில் டெல்லியை 7 விக்கெட் வித்யாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. இந்நிலையில் அந்தப் போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 100% அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் சார்பில் பிசிசிஐ அதிரடியாக அறிவித்துள்ளது.

அதாவது இந்த வருடம் கொல்கத்தா அணி தங்களின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் வீரர் மயங் அகர்வால் விக்கெட்டை ஹர்ஷித் ராணா எடுத்தார். அப்போது தன்னுடைய வாயில் கையை வைத்து முத்தமிட்ட அவர் அதை மயங் அகர்வால் முகத்துக்கு நேராக பறக்க விட்டு வெறித்தனமாக விக்கெட்டை கொண்டாடியது ரசிகர்களை கடுப்பாக்கியது.

- Advertisement -

விளையாட தடை:
ஏனெனில் மயங் அகர்வால் ஏற்கனவே இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சீனியர் வீரர். மறுபுறம் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஹர்ஷித் ராணாவை பல ரசிகர்களுக்கு கூட யார் என்று தெரியாது. அதனால் முதலில் சீனியரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

அத்துடன் இது போன்ற கொண்டாட்டங்கள் தேவையில்லை என்று அவரை கண்டித்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் “பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்கும் போதெல்லாம் உங்களுக்கு இப்படி முத்தமிட்டால் தாங்குவீர்களா” என்று விமர்சித்திருந்தார். அது போக அந்த செய்கைக்காக ஹர்ஷித் ராணாவுக்கு 60% அபராதத்தை விதித்த பிசிசிஐ கடுமையான தண்டனையும் எச்சரிக்கையும் கொடுத்திருந்தது.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் டெல்லிக்கு எதிரான இந்தப் போட்டியில் அபிஷேக் போரேல் விக்கெட்டை எடுத்த ஹர்ஷித் மீண்டும் அதே போல கொண்டாடுவதற்காக வாயில் கையை வைத்து முத்தமிட சென்றார். இருப்பினும் ஏற்கனவே பிசிசிஐ கொடுத்த தண்டனை நினைவுக்கு வந்ததால் உடனடியாக அதை தவிர்த்த அவர் விக்கெட்டை முத்தமிட்டு கொண்டாடவில்லை. ஆனால் அபிஷேக் போரேலை “களத்திலிருந்து வெளியே போ” என்ற வகையில் கைவிரலை நீட்டி ஹர்ஷித் ராணா கொண்டாடினார்.

அதன் காரணமாக இப்போட்டியில் மீண்டும் 2.5 விதிமுறை மீறிய ஹர்ஷித் ராணாவுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 100% அபராதம் மிதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் எச்சரிக்கையை மீறி 2வது முறையாக ஹர்ஷித் ராணா இந்த தவறை செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஐ.பி.எல் விளாயாண்டது போதும் கெளம்பி வாங்க.. இங்கி வீரர்களுக்கு அழைப்பு விடுத்த நிர்வாகம் – என்ன நடந்தது?

அதனால் அபராதத்துடன் கொல்கத்தா அணிக்காக ஹர்ஷித் ராணா அடுத்த ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தத்தில் விக்கெட்டை எடுத்து அதிகப்படியாக நன்னடத்தையின்றி கொண்டாடியதற்காக இளம் இந்திய வீரர் இப்படி தண்டிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

- Advertisement -