- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாண்டியாவை விட நல்ல ஃபினிஷர்.. ரிங்குவை ஏன் செலக்ட் பண்ணல.. புள்ளிவிவரத்துடன் ரசிகர்கள் விளாசல்

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த 15 பேர் கொண்ட அணியில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தேர்வாகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அதே போல ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால், சிஎஸ்கே அணியில் அசத்தி வரும் சிவம் துபே ஆகிய இளம் வீரர்கள் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் காயத்திலிருந்து குணமடைந்து டெல்லி அணியில் கேப்டனாக அசத்தும் ரிஷப் பண்ட், ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமாக திகழும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வாகியுள்ளனர்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
ஆனால் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கொல்கத்தா அணிக்காக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அவர் 38 (21), 37* (15), 22* (14), 31* (9), 46 (29), 6 (8), 68* (39), 14 (10), 16* (9), 9* (9), 69* (39) என 356 ரன்களை 89.0 என்ற அபாரமான சராசரியிலும் 176.24 என்ற அற்புதமான ஸ்டிரைக் ரேட்டிலும் எடுத்துள்ளார்.

குறிப்பாக 2023 அயர்லாந்து டி20, தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் கடைசி நேரத்தில் களமிறங்கி அட்டகாசமாக விளையாடிய ரிங்கு சிங் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதனால் தோனிக்கு பின் அடித்த ஃபினிஷர் என்று பல ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் அவரை பாராட்டினர்.

- Advertisement -

இருப்பினும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 123 ரன்களை 150.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த ஒரே காரணத்திற்காக அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக் குழு பெயருக்காக ரிசர்வ் பட்டியலில் மட்டும் இணைந்துள்ளது. மறுபுறம் மும்பை அணியில் கேப்டன் செயல்பட்டு வரும் பாண்டியா பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை அனைவரும் அறிவோம்.

இதையும் படிங்க: 2வது முறை.. வசமாக சிக்கிய கொல்கத்தா வீரர்.. 100% அபராதத்துடன் விளையாடுவதற்கு தடை விதித்த பிசிசிஐ

மேலும் இந்திய அணிக்காக அவர் 71 இன்னிங்ஸில் 1348 ரன்களை 139.83 என்ற குறைவான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் முதன்மை ஆல் ரவுண்டர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை தேர்வுக்குழு துணை கேப்டனாக தேர்வு செய்துள்ளது. அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் ரிங்கு சிங் போன்ற வீரரை விட்டுவிட்டு நட்சத்திர அந்தஸ்தை கொண்ட வீரரை தேர்வு செய்தால் வெற்றி பெற முடியுமா? என்று தேர்வுக் குழு மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -