நாடு இருக்குற நிலைமைல கோவா டூர் சென்று போலீசிடம் வசமாக சிக்கிய இந்திய வீரர் – விவரம் இதோ

Shaw-1
- Advertisement -

இந்தியாவில் கொரானாவின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வந்த சூழ்நிலையிலும், இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தொடர் ஆரம்பித்த பாதியிலேயே அதில் பங்கேற்றிருந்த பல வீரர்கள் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். எனவே இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறது பிசிசிஐ. அதனைத் தொடர்ந்து தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்களையும், இந்திய வீரர்களையும் பத்திரமாக அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் பிசிசிஐயின் நிர்வாகிகள். கொரானா தொற்று பரவலின் காரணமாக, இந்தியாவில் தற்போது இ-பாஸ் நடைமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

avesh

- Advertisement -

இந்தியாவின் நிலமை இப்படி இருக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஒருத்தர் தனது மாநிலத்தில் இருந்து கோவாவிற்கு சுற்றுலா செல்லும் போது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டைதை அடுத்து, ஜூன் மாதம் நடைபெறும் இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷாவின் பெயர் இடம் பெறவில்லை. இருந்தாலும் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது.

இலங்கை தொடருக்கும் இன்னும் ஒன்றரை மாதங்கள் இருப்பதால் இந்த இடைப்பட்ட நாட்களில் கோவாவிற்கு ஒரு ஜாலியான டூர் சென்று வரலாம் என்று முடிவெடுத்த ப்ரித்வி ஷா, மும்பையிலிருந்து கோவா சென்றிருக்கிறார். கோல்ஹாபூர் வழியாக கோவா சென்று கொண்டிருந்த அவரை அம்போலி நகர போலிசார் தடுத்து நிறுத்தி இ-பாஸ் படிவத்தை காட்டச் சொல்லியிருக்கின்றனர்.

shaw-2

ஆனால் ப்ரித்வி ஷாவிடம் இ-பாஸ் இல்லாததால், மேற்கொண்டு பயணம் செய்ய அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. பிறகு தனது கைபேசியிலேயே இ-பாஸ்ஸை அப்ளை செய்த ப்ரித்வி ஷாவிற்கு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அது வழங்கப்பட்டிருக்கிறது. அதனை போலிசாரிடம் காட்டிய அவர், அதற்கு ப் பிறகு ஜாலியாக டூர் அடிக்க கோவாவிற்கு சென்றுவிட்டார்.

shaw

இதற்கு முன்னராக ப்ரித்வி ஷாவின் உடல் எடை அதிகமாக இருக்கிறது, எனவே அவர் தனது உடல் எடையை குறைத்தால்தான் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்று இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியிருந்தார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ப்ரிதவி ஷா, கிடைத்த இந்த நேரத்திலும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடமால், கோவாவிற்கு இ-பாஸ்கூட இல்லாமல் சுற்றுலா சென்றுள்ளது, அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement