மருத்துவமனையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட ப்ரித்வி ஷா – டெல்லி அணிக்கு திரும்புவாரா?

Prithvi-2
Advertisement

டெல்லி அணியின் இளம் அதிரடி தொடக்க வீரரான ப்ரித்வி ஷா இந்த ஆண்டு டெல்லி அணிக்காக தக்க வைக்கப்பட்டது மட்டுமின்றி தொடர்ச்சியாக துவக்க வீரராகவும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இத்தொடரின் ஆரம்பத்தில் இந்திய வீரர்களுடன் களம் இறங்கி வந்த அவர் அடுத்த சில போட்டிகளிலேயே டேவிட் வார்னரின் வருகைக்குப் பிறகு அவருடன் இணைந்து அற்புதமான அதிரடியான துவக்கத்தை அளித்து வந்தார். இதன் காரணமாக டெல்லி அணியின் துவக்க ஜோடியால் மிக பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டது.

David Warner Prithivi Shaw

இதுவரை நடைபெற்று முடிந்த 12 போட்டிகளில் டெல்லி அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இனிவரும் இரண்டு போட்டிகள் அந்த அணிக்கு மிக முக்கியமானவை. அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே டெல்லி அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற வேளையில் ப்ரித்வி ஷாவின் பங்களிப்பு இந்த போட்டிகளுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனால் கடந்த மூன்று போட்டிகளாகவே அவர் காய்ச்சல் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார். அதோடு டெல்லி அணியுடன் இல்லாமல் இருக்கும் அவர் மருத்துவமனையில் தீவிர காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக ஏற்கனவே அணியின் கேப்டன் பண்ட் மற்றும் துணை பயிற்சியாளர் வாட்சன் ஆகியோர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வேளையில் தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி அணிக்கு திரும்ப உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

prithvi 1

மேலும் அதனை உறுதி செய்யும் விதமாக ப்ரித்வி ஷாவும் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்கு கீழ் சில கருத்துக்களை பகிர்ந்த அவர் : நான் காய்ச்சலில் இருந்து நன்கு குணமடைந்து வருகிறேன். உங்களுடைய ஆசியுடன் நிச்சயம் மீண்டும் விரைவில் ஆக்ஷனுக்கு திரும்புவேன் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி டெல்லி அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அணியில் இணைந்தாலும் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் அவர் விளையாடுவது கேள்விகுறி தான். ஆனால் ஒருவேளை டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் நிச்சயம் இறுதிகட்ட போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று நம்பலாம்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் தான் இடம்கிடைக்கல. எனக்கு இந்த பர்மிஷனாவது கொடுங்க – பி.சி.சி.ஐ யிடம் ரெய்னா கோரிக்கை

புள்ளிப் பட்டியலில் தற்போது 5-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றில் விளையாட வாய்ப்பு இருக்கும் ஒரு போட்டியில் தோற்றால் கூட இந்த தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலைதான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement