அவரோட வீக்னஸ் எல்லாருக்கும் தெரியும். இருந்தும் ஏன் அணியில் சேத்தீங்க ? – சர்ச்சையான வீரரின் தேர்வு

Ind
- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4 டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் பிங்க் நிற பந்தில் விளையாடி போவதாகவும் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் விடைப்பெறுவதாக கூறியுள்ளார். இதனால் மீதமுள்ள மூன்று போட்டிகளில் பல குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது.

INDvsAUS

- Advertisement -

அடுத்த மூன்று போட்டிகளுக்கு யார் கேப்டன் ? யார் தொடக்க வீரர் ? யார் விக்கெட் கீப்பர் ? என பல்வேறு குழப்பங்கள் இந்திய அணியில் நிலவி வருகிறது. இந்நிலையில் சுப்மன் கில், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய மூவரில் யாரை தொடக்க வீரர்களாக தேர்வு செய்யலாம் என்று அணியின் கேப்டன் கோலி குழப்பத்தில் இருக்கிறார். இவர்களில் பிரித்வி ஷாவை அணியிலிருந்து விலக்க வேண்டும் என்று பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிரித்வி ஷா தனது பேட்டிங்கில் பல தவறுகளை மேற்கொண்டு வருகிறார். தனது கால்களை நகர்த்தாமல் பேட்டிங் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளும்போது கூட அவர் தனது கால்களை நகர்த்தாமல் தனது விக்கெட்டை சுலபமாக இழந்துவிடுகிறார். பலரும் இதுக்குறித்து அறிவுரை கூறியும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. ஐபிஎல் தொடரில் இவர் தனது கால்களை நகர்த்தாமல் விளையாடி விரைவில் தனது விக்கெட்டை இழந்தார். தற்போது பயிற்சி போட்டியிலும் கூட இதே தவறை மீண்டும் செய்கிறார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் இவருடைய விக்கெட்டை சுலபமாக எடுத்து விடுவர். இது இந்திய அணிக்கு சிக்கலாக இருக்கும். தனது அறிமுக காலத்தில் ‘அடுத்த சச்சின், அடுத்த சேவாக்’ என்றெல்லாம் புகழப்பட்டஇவர் தற்போது தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சுப்மன் கில் இதுவரை டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை என்றாலும் சிறந்த பார்மில் இருக்கிறார்.

Shaw

ஆனாலும் முதல் போட்டிக்கான அணியில் தற்போது வெளியான தகவலின்படி ப்ரித்வி ஷா அணியில் சேர்க்கப்ட்டுள்ளார். இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை வீழ்த்துவார்கள் என்றும் இந்த ஒரு போட்டியில் அவர் சொதப்பினால் கூட அவரது இடம் காலியாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதால் இந்த தொடக்க வீரருக்கான பிரச்சினை முடிவுக்கு வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Advertisement