நடப்பு ஐ.பி.எல் தொடரில் காய்ச்சலால் வெளியேறிய டெல்லி அணியின் நட்சத்திர வீரர் – அடப்பாவமே இவருமா?

DC vs PBKS 2
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது டெல்லி அணியில் இருந்து ஒரு நட்சத்திர வீரர் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சென்னை அணியை சேர்ந்த தீபக் சாஹர் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாட முடியாமல் போனது. அதேபோன்று மும்பை அணி சார்பாகவும் தொடரின் ஆரம்பத்திலேயே ஜோப்ரா ஆர்ச்சர் வெளியேறினார்.

Kane Williamson DC vs SRH

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தொடரின் பாதியில் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக வெளியேறினார். அதேபோன்று சிஎஸ்கே அணியிலும் ஜடேஜா காயம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இப்படி தொடர்ச்சியாக வீரர்கள் வெளியேறி வரும் வேளையில் டெல்லி அணியில் இருந்து தற்போது ஒரு வீரர் வெளியேறி உள்ளார்.

இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணியானது 6 வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் வேளையில் அடுத்து வரும் இரண்டு போட்டிகள் அந்த அணிக்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரின் எஞ்சியுள்ள கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் ப்ரித்வி ஷா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Prithvi-Shaw

கடைசியாக மே 1-ஆம் தேதி நடைபெற்ற லக்னோ அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய ப்ரித்வி ஷா அதன் பின்னர் மீண்டும் விளையாடவில்லை. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இதுகுறித்து கூறுகையில் : அவருக்கு டைபாய்டு அல்லது வேறு ஏதோ காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அவர் மருத்துவமனையில் தான் உள்ளார். இதன் காரணமாக அடுத்து வரும் எஞ்சிய போட்டிகளிலும் அவர் விளையாடமாட்டார் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சனும் அந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ப்ரித்வி ஷா எந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனாலும் கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த லீக் போட்டிகளில் அவர் விளையாட முடியாததால் தற்போது அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதையும் படிங்க : தீபக் சாஹருடன் சேர்ந்து அடுத்த சீசன் மாஸ் காட்டப்போகும் இளம் வீரர் – கெத்தான சாதனை, ரசிகர்கள் ஹேப்பி

மிகச் சிறப்பான பந்துவீச்சாளர்களை கூட எளிதாக தும்சம் செய்யும் அவர் எங்கள் அணியில் இல்லாதது ஒரு இழப்பு தான். விரைவில் அவர் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாக வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement