ஒரே ஒரு வாய்ப்பு தான். யூஸ் பண்ணலைனா இதோட ஓவர். இளம் வீரரை டார்கெட் செய்த நிர்வாகம் – விவரம் இதோ

Shaw
- Advertisement -

இந்திய அணி டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 17 ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடக்க போகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணி வீரர்கள் இந்திய அணியுடன் இணைந்து ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியில் ஆடிவந்த ரோகித் சர்மா, ஷிகர் தவான் போன்ற வீரர்கள் இல்லாததால் இந்த டெஸ்ட் தொடரில் துவக்க வீரர்களுக்கு பெரும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

இதற்காக மாயங்க் அகர்வால், கேஎல் ராகுல், சுப்மன் கில்ஸ், பிரித்வி ஷா மற்ற வீரர்களுக்கு விஷப்பரிட்சை வைக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இவர்கள் தான் தற்போது தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாடி வருகின்றனர். இதில் முக்கியமாகக் கருதப்படுபவர் பிரித்வி ஷா. இளம் வீரராக இருப்பதால் இவர் ஓரளவுக்கு ஆடி விட்டால், அடுத்த பத்து முதல் பதினைந்து வருடங்களுக்கு இந்திய துவக்க இடத்திற்கு கவலைப்படத் தேவையில்லை என்று இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

அப்படி இருந்தும் பிரித்வி ஷா கடந்த இரண்டு வருடமாக பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் தான் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடியதால் கடைசி சில போட்டிகளில் இவருக்கு அணியில் கூட வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை.

அதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் 4 ஆட்டங்களில் 0,19, 40, 3 என மோசமாக விளையாடி வருகிறார். மேலும் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் அவரால் ஆட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு கண்டிப்பாக அணியில் இடம் கொடுக்கப்படாது என்று தெரிகிறது.

Shaw-1

இருப்பினும் ஒருவேளை ப்ரித்வி ஷாவிற்க்கு முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமாயின் அவர் நிச்சயம் அவரை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்படி இல்லையென்றால் அவர் இனி டெஸ்ட் அணியிலும் நீடிக்க முடியாது. ஏனெனில் ஏகப்பட்ட திறமையான இளம்வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய காத்திருக்கின்றனர். இதனால் கிடைக்கும் வாய்ப்பினை அனைவரும் சரியாக பயன்படுத்தியே ஆக வேண்டும்.

Advertisement