IPL 2023 : அவர் இந்தியாவுக்கு விளையாட ரெடி ஆகிட்டாரு, சீக்கிரம் செலக்ட் பண்ணுங்க – ரோஹித்துக்கு கங்குலி நேரடி கோரிக்கை

Ganguly-ipl
IPL MI
- Advertisement -

இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. இந்த வருடம் கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் 10 அணிகளை போலவே அதில் விளையாடும் நிறைய இளம் வீரர்களும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் களமிறங்குகிறார்கள். குறிப்பாக ருதுராஜ் கைக்வாட் போன்ற சில இளம் கிரிக்கெட் வீரர்கள் பெரிய ரன்களை குவித்து மீண்டும் இந்திய அணியில் தங்களது இடத்தை பிடிக்கும் முயற்சியுடன் விளையாட உள்ளனர்.

shaw

- Advertisement -

அந்த வகையில் டெல்லியை சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்வாகியும் விளையாடும் 11 பேர் அணியில் பெறாத வாய்ப்பை இந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட்டு பிடிக்க போராட உள்ளார். 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினர்.

ரெடியா இருக்காரு:
ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தவறிய அவர் 2021 ஜூலையுடன் இந்திய அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்டார். அதன் பின் 2022 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் கண்டுகொள்ளாத தேர்வுக்குழு சமீபத்திய ரஞ்சி கோப்பையில் முச்சதம் விளாசியதால் மீண்டும் அவரை தேர்வு செய்தது. எனவே போராடி இந்திய அணியை நெருங்கியுள்ள பிரிதிவி ஷா தற்போது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்தியாவுக்காக விளையாட தயாராகி உள்ளதாக முன்னாள் கேப்டன் மற்றும் டெல்லி அணியின் இயக்குனர் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

shaw 1

எனவே அவர் மீது ரோஹித் சர்மா மற்றும் தேர்வு குழுவினர் ஒரு கண் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளும் கங்குலி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பிரிதிவி ஷா இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பது அனைத்தும் இந்திய அணியில் எந்த இடம் காலியாக இருக்கிறது என்பதை பொறுத்ததாகும். இருப்பினும் ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழுவினர் அவரை நெருக்கமாக கண்காணித்து வருகிறார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். மிகச் சிறந்த வீரரான அவர் தற்போது இந்தியாவுக்காக மீண்டும் விளையாட தயாராகியுள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் இம்முறை உடல் எடையை குறைத்து எக்ஸ்ட்ராவாக உழைத்து வருவதால் தனது ஐபிஎல் கேரியரிலேயே இந்த சீசனில் பிரிதிவி ஷா உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று நம்புவதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது கங்குலியின் பாராட்டுகளையும் பெற்றுள்ள அவர் நிச்சயமாக இந்த தொடரில் அசத்தும் பட்சத்தில் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்புகள் பிரகாசமாகலாம்.

Ganguly

இருப்பினும் அதற்கு ஷிகர் தவான், கேஎல் ராகுல் ஆகியோரை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடித்துள்ள சுப்மன் கில்லை விட இந்த சீசனில் அவர் அதிக ரன்கள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. முன்னதாக ரிஷப் பண்ட் காயமடைந்து வெளியேறியுள்ளதால் அண்டர்-19 உலக கோப்பையை வென்று உள்ளூர் தொடரிலும் மாநில அணிக்காக கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்ட பிரிதிவி ஷா இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க:வீடியோ : புஷ்பான்னா பிளவர்னு நெனைச்சீங்களா? நான் ஃபயரு – ரசிகர்களை நோக்கி ஜடேஜா செய்த இமிடேஷன்

ஆனாலும் நீண்ட காலமாக சர்வதேச அளவில் விளையாடாமல் இருப்பதன் காரணமாக அவரை விட அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த சீசனில் டெல்லி அணியை வழி நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement