கிராம மக்களின் குறை தீர்க்க நேரில் சென்று வீட்டுக்கூரை அமைத்து தந்த இளம் வீரர் – விவரம் இதோ

Shaw
- Advertisement -

மும்பையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிர மாநிலம் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அம்மாநில தலைநகரமான மும்பை நகரமே கொரோனா வைரஸ் காரணமாக ஸ்தம்பித்து நெய்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மும்பை மக்களுக்கு உதவ அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

Corona-1

- Advertisement -

இதனை அடுத்து பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் உதவி வரும் மும்பை வாசிகளான கிரிக்கெட் வீரர்கள் கோலி மற்றும் ரோஹித் ஆகியோரும் தங்களால் முடிந்த உதவிகளை மகாராஷ்டிர மாநில அரசுக்கு வழங்கினர். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒரு பக்கமிருக்க இம்மாத துவக்கத்தில் நிசகரா புயல் மும்பை மாநிலத்தை தாக்கியது.

இந்த புயலால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பிரபலங்கள் உதவி செய்ய முன் வரவேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த உதவிக்கு ரோகித் மற்றும் கோலி உட்பட மும்பை கிரிக்கெட் பிரபலங்கள் யாரும் உதவாத நிலையில் தற்போது இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா முன்வந்து உதவி இருக்கிறார்.

prithvi-shaw

அவரின் இந்த உதவிக்காக பெரும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். ப்ரித்வி வெறும் நிதியாக இந்த உதவியினை செய்யவில்லை. அதற்குமாறாக நேரடியாக மும்பையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்டவா பகுதியில் டோகவாதே என்ற கிராமத்திற்கு சென்று அந்த ஊர் தலைவர் வீட்டில் தங்கி அவருடைய மகனுடன் சேர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

இரண்டுமாத தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள இந்த கிராம மக்களின் குறைகளை தீர்க்க அங்கு சென்ற ப்ரித்வி ஷா வீட்டின் கூரைகள் இல்லாதவர்களுக்கு கூரை அமைக்கும் பணியையும், பசியில் வாடுபவர்களுக்கு உணவுகள், கொரோனா பரவாமல் தடுக்க பாதுகாப்பு காரணங்கள் என அனைத்தையும் அங்கே தங்கி நேரடியாக சென்று செய்துவருகிறார்.

Shaw

ப்ரித்வி ஷா செய்த இந்த உதவி கிராமத்தின் தலைவர் மகன் மூலம் சமூகவலைத்தளத்தில் வெளியானது. இதனை கண்ட பிரபலங்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிறிய வயதில் இவ்வளவு பெரிய மனது கொண்ட வீரர் என்றும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Advertisement