பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 2 வீரர்களை கழட்டிவிட்டு சொதப்பல் வீரருக்கு வாய்ப்பளித்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

INDvsAUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் துவங்க இருக்கிறது. அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ நாளைய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

IND

- Advertisement -

பிசிசிஐ இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான அணியில் துவக்க வீரர்களாக யார் இறங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஏற்கனவே உறுதியான மயங்க் அகர்வாலுடன் மற்றொரு துவக்க வீரராக பிரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ யின் இந்த அதிரடி அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர் பழைய ஆட்டத்தை கணக்கில் கொண்டு இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் துவக்க வீரர் இடத்திற்கு கடும்போட்டி அளித்த ராகுல் மற்றும் கில் ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுப்மன் கில் பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தார். இதனால் இவருக்கு துவக்க வீரராக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐ.பி.எல் தொடரிலும் சரி தற்போதைய பயிற்சி போட்டியிலும் சரி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷாவிற்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

மேலும் சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 என ரன் குவிப்பில் அசத்தி வரும் ராகுல் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தாலும் அவர் ஆடும் லெவனில் இடம் பிடிக்காதது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு போட்டியில் ப்ரித்வி ஷாசொதப்பி னாலும் கூட இனி அவரால் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிப்பது கடினம் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Shaw

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் லிஸ்ட் இதோ :

1) அகர்வால், 2) ப்ரித்வி ஷா, 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) விஹாரி, 7) சஹா, 8) அஷ்வின், 9) பும்ரா, 10) முகமது ஷமி, 11) உமேஷ் யாதவ்

Advertisement