விதிமுறையை மீறிய ப்ரித்வி ஷா. போட்டி ஊதியத்தில் 25% அபராதம் – அப்படி என்ன தப்பு செய்தார் தெரியுமா?

Prithvi-Shaw
- Advertisement -

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 45-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் தாங்கள் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

LSG vs DC

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்காரணமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி லக்னோ அணி திரில் வெற்றியை ருசித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷாவிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

prithvi shaw 1

அதன்படி ஐபிஎல் நிர்வாகம் ப்ரித்வி ஷாவிற்கு இப்படி அபராதத்தை விதிக்க என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தான் செய்த குற்றத்தை ப்ரித்வி ஷா ஒப்புக் கொண்டதாகவும் இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டதாகவும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் நடத்தை விதி 2.2 லெவல் ஒன்றின் கீழ் பிரித்வி ஷா செய்துள்ள இந்த தவறு யாதெனில் போட்டி நடைபெறும் போது எதிரணி வீரர்களிடமோ அல்லது நடுவரிடமோ எதிர்ப்பை சைகை மூலமாக காட்டுவதாகும்.

இதையும் படிங்க : சிக்ஸர் அடிப்பதில் கில்லாடி! ரோஹித், ரெய்னாவை முந்திய கேஎல் ராகுல் – 2 சாதனைகள் படைப்பு

இந்த போட்டியில் அம்பயருக்கு எதிராக ப்ரித்வி ஷா சைகை மூலம் தனது எதிர்ப்பை காட்டியதால் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 6 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய லக்னோ அணி புள்ளிபட்டியலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement