சிக்ஸர் அடிப்பதில் கில்லாடி! ரோஹித், ரெய்னாவை முந்திய கேஎல் ராகுல் – 2 சாதனைகள் படைப்பு

Rahul
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் ஒரு மாதத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 45-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள் சந்தித்தன. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த லக்னோவுக்கு தொடக்க வீரர் குவின்டன் டி காக் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (13) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த தீபக் ஹூடா உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் அதிரடியான ரன் குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 5-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் நேரம் செல்ல செல்ல அதிரடியாக டெல்லி பவுலர்களை எதிர்கொண்டு 2-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சூப்பரான பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோவை வலுவான நிலையை எட்ட வைத்தனர்.

KL Rahul vs DC

- Advertisement -

அதில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (34) ரன்கள் எடுத்து தீபக் ஹூடா அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய கேப்டன் ராகுல் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 77 (51) ரன்கள் எடுத்தார். இறுதியில் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 17* (16) ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 195/3 ரன்கள் சேர்த்த நிலையில் டெல்லி சார்பில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

டெல்லி தோல்வி:
அதை தொடர்ந்து 196 என்ற பெரிய இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 5 (7) பிரிதிவி ஷா 3 (4) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 13/2 என அந்த அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் 2-வது விக்கெட்டுக்கு அதிரடியாக 60 ரன்கள் சேர்த்து சரிந்த தங்களது அணியை மீட்டெடுத்தனர். இந்த ஜோடியில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் மிட்செல் மார்ஷ் 37 (20) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த இளம் வீரர் லலித் யாதவ் 3 (4) ரன்களில் அவுட்டானது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

Axar Patel

இருப்பினும் மற்றொருபுறம் 7 பவுண்டரி 1 சிக்சர் அடித்து வெற்றிக்காக போராடிய கேப்டன் ரிஷப் பண்ட் 44 (30) ரன்களில் அவுட்டானதால் மேலும் பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு நான் இருக்கிறேன் என்ற வகையில் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு 35 (21) ரன்களை அதிரடியாக எடுத்த ரோவ்மன் போவலும் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் அக்சர் படேல் அதிரடியாக 42* (24) ரன்களை எடுத்த போதிலும் அவருக்கு கைகொடுக்கும் வகையில் எதிர்ப்புறம் தரமான பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தால் 20 ஓவர்களில் 189/7 ரன்களை மட்டுமே எடுத்த டெல்லி போராடி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மோசின் கான் 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

கலக்கும் ராகுலின் லக்னோ:
இந்த வெற்றியால் பங்கேற்ற 10 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த லக்னோ புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. இந்த வெற்றிக்கு 77 ரன்கள் குவித்து பேட்டிங்கிலும் கேப்டனாகவும் கேஎல் ராகுல் மிக முக்கிய பங்காற்றினார். மேலும் பங்கேற்ற 10 போட்டிகளில் 2 அரை சதங்கள் 2 சதங்கள் உட்பட 451* ரன்களை 56.38 என்ற சராசரியில் 145.02 என்ற சூப்பரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ள அவர் இந்த வருடம் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 2-வது இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பிக்காக ஜோஸ் பட்லருடன் போட்டி போட்டு வருகிறார்.

KL Rahul 103

மேலும் சமீப காலங்களாகவே ரன் மழை பொழிந்து வரும் அவர் கடந்த 2018 ஐபிஎல் தொடரிலிருந்து முறையே 659, 593, 670, 626 என 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வரும் நிலையில் இந்த வருடமும் 10 போட்டிகளில் 451* ரன்களை கடந்துள்ளார். இதன் வாயிலாக “ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக சீசன்களில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த 3-வது இந்திய பேட்ஸ்மேன்” என்ற பெருமையை பெற்றுள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. சுரேஷ் ரெய்னா : 7 (2008 – 2014)
2. ஷிகர் தவான் : 6 (2016 – 2021)
3. கேஎல் ராகுல் : 5 (2018 – 2022)*

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா? வர்ணனையாளரின் கேள்விக்கு டாஸின் போது பதிலளித்த – தல தோனி

சிக்ஸர் கில்லாடி:
அத்துடன் இந்தப் போட்டியில் 5 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் ஐபிஎல் போட்டிகளில் 150 சிக்சர்களை கடந்தார். அதை வேகமாக கடந்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 சிக்சர்களை விளாசிய இந்திய பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. கேஎல் ராகுல் : 95* இன்னிங்ஸ்
2. சஞ்சு சாம்சன் : 125 இன்னிங்ஸ்
3. சுரேஷ் ரெய்னா : 128 இன்னிங்ஸ்
4. ரோஹித் சர்மா : 129 இன்னிங்ஸ்
5. விராட் கோலி : 132 இன்னிங்ஸ்

Advertisement