அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா? வர்ணனையாளரின் கேள்விக்கு டாஸின் போது பதிலளித்த – தல தோனி

dhoni 1
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக ஜடேஜா அறிவிக்கப்பட்டார். அப்படி ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் 8 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றதால் தனது கேப்டன்சி அழுத்தம் காரணமாக ஆட்டம் பாதிக்கப்படுவதாக கூறி தனது தனிப்பட்ட ஆட்டத்தை மேம்படுத்துவதற்காக நேற்று கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா திடீரென விலகினார். இதன் காரணமாக மீண்டும் அதிகாரப்பூர்வமாக தோனி சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

MS Dhoni vs MI

- Advertisement -

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சி இருந்து வருகிறது. ஏனெனில் கேப்டனாக மீண்டும் தோனியை பார்க்க விரும்பிய ரசிகர்கள் இவ்வளவு விரைவாகவே பார்த்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி இன்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய 46 ஆவது லீக் போட்டியில் கேப்டனாக டாஸ் போட மைதானத்திற்கு வந்தார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது முதலில் விளையாடி முடித்துள்ள சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் அணி விளையாட இருக்கிறது.

Dhoni

இந்நிலையில் இன்று டாஸ் போட தோனி மைதானத்திற்கு வந்ததும் வர்ணனையாளர் அவரிடம் அடுத்த ஆண்டு மீண்டும் உங்களை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தோனி கூறுகையில் :

- Advertisement -

நிச்சயம் என்னை நீங்கள் மஞ்சள் நிற ஜெர்சியில் பார்க்க முடியும். ஆனால் அது ஒரு வீரராக விளையாடுவதாக இருக்கலாம் அல்லது வேறு வகையிலும் இருக்கலாம் தற்போதைய சூழலை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மீட்டிங்கில் ஜடேஜா பேசிய இந்த விடயம் தான் அவரது விலகலுக்கு காரணமாம் – வெளியான தகவல்

அவரது இந்த பேட்டியின் மூலம் நிச்சயம் தோனி அடுத்தாண்டு விளையாடுவார் என்றே தெரிகிறது. அப்படி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் சென்னை அணியில் ஒரு முக்கிய பொறுப்பில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

Advertisement