மீட்டிங்கில் ஜடேஜா பேசிய இந்த விடயம் தான் அவரது விலகலுக்கு காரணமாம் – வெளியான தகவல்

Jadeja
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மும்பை அணியை தவிர்த்து மற்ற அணிகள் அனைத்தும் தற்போது கணக்கீடுகளின் அடிப்படையில் உயிர்ப்புடன் உள்ளதால் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. அந்த வகையில் சென்னை அணியும் எப்படியாவது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை நடைபெற்றுள்ள 8 போட்டிகளில் சென்னை அணி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதால் தற்போது 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.

CSK vs RCB 2

- Advertisement -

எனவே இனி வரும் ஆறு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும் என்பதனால் இனி வரும் ஆறு போட்டிகளும் சென்னை அணிக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் காரணமாக மீண்டும் தோனி சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை தற்போது கையில் எடுத்திருக்கிறார்.

தோனி மீண்டும் கேப்டன் ஆனதன் காரணமாக அடுத்து வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படி திடீரென கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகியதற்கு என்ன காரணம் என்று பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு சென்னை அணியின் நிர்வாகம் கொடுத்த பதிலில் :

Jadeja-1

அவர் தனது தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்தவே இந்த கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் கேப்டன் பதவி விலகுவதற்கு முன்னர் சென்னை அணியின் மீட்டிங்கில் ஜடேஜா பேசிய விடயங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சென்னை அணியின் மீட்டிங் போது பேசிய ஜடேஜா கூறுகையில் : பயிற்சியின்போது என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை.

- Advertisement -

இதற்கு காரணம் கேப்டன் பொறுப்பில் இருக்கும் அழுத்தம் தான் என நினைக்கிறேன். எனவே நான் கேப்டன் பதவியில் இருந்து விலகி என்னுடைய ஆட்டத்தில் கவனத்தை செலுத்த இருக்கிறேன். மீதமுள்ள 6 போட்டிகளிலும் நாம் வெற்றி பெற்றால் மட்டுமே நம்மால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். எனவே இந்த அழுத்தத்தில் இருந்து விலகி நான் தோனியிடம் அந்தப் பொறுப்பினை ஒப்படைக்க போகிறேன்.

இதையும் படிங்க : சைலன்ட்டாக மிரட்டல் பினிஷெராக மிரட்டும் இளம் இந்திய வீரர் – ரசிகர்களே எதிர்ப்பாரா திறமை

கேப்டன் பதவியிலிருந்து விலகுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த முடிவினை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று பேசியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பிறகு அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது மீண்டும் கேப்டனாக தோனி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement