சைலன்ட்டாக மிரட்டல் பினிஷெராக மிரட்டும் இளம் இந்திய வீரர் – ரசிகர்களே எதிர்ப்பாரா திறமை

Rahul tewatia Odean Smith
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பரபரப்பான திருப்பங்களுடன் மும்பை நகரில் ஒரு மாதங்களைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் வாரத்தில் இருந்தே ஒரு சில நட்சத்திர வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லி அடிக்கும் கில்லியாக அடுத்தடுத்த வெற்றிகளுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. தற்போது வரை பங்கேற்ற 9 போட்டிகளில் 8 வெற்றிகளையும் ஒரு தோல்வியும் பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கிறது.

gt

- Advertisement -

முதல் வாரத்தில் இருந்து இப்போது வரை கொஞ்சம் கூட சாயாமல் தொடர்ச்சியாக வெற்றிநடை போடும் அந்த அணியை தவிர வேறு எந்த அணியும் இதுவரை 7 வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. இதன் காரணமாக முதல் சீசனிலேயே பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ள அந்த அணி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

குஜராத் சாம்பியனாகுமா:
அந்த அணியின் பந்துவீச்சில் முகமது சமி, லாக்கி ஃபர்குசன் ஆகியோருடன் ரஷித் கான் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் வேளையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா தேவைப்படும் நேரங்களில் பந்து வீசுவதால் அந்த அணியின் பவுலிங் வலுவாக காட்சியளிக்கிறது. அதேபோல் பேட்டிங்கில் அந்த அணியின் சுப்மன் கில் தவிர டாப் ஆர்டரில் இதர வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் அதை மூடி மறைக்கும் வகையில் கடந்த காலங்களில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து பினிஷராக வலம் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு வந்ததும் 3-வது இடத்தில் பேட்டிங் செய்து தனது அணி சரியும் போதெல்லாம் நங்கூரமாக தாங்கிப்பிடித்து அதிரடியாக ரன்களை குவிக்கிறார்.

Hardik Pandya GT Vs RR

அப்படியானால் அவர் செய்யவேண்டிய பினிஷர் வேலையை செய்ய நட்சத்திர வீரர்கள் இல்லையே என கவலைப்பட்ட குஜராத்துக்கு ராகுல் திவாடியா, டேவிட் மில்லர், ரசித் கான் என 3 வீரர்கள் ஒன்று சேர்ந்து யாருமே எதிர்பாராத வகையில் எதிரணிகளை மிரட்டுபவர்களாக உருவெடுத்துள்ளார்கள். குறிப்பாக அந்த அணிக்காக விளையாட 9 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ராகுல் திவாடியா இவரெல்லாம் இந்த அளவுக்கு அடிப்பாரா என்று வியக்கும் அளவுக்கு தனது அபார திறமையால் ரசிகர்களின் வாய் மேல் கை வைக்க செய்துள்ளார்.

- Advertisement -

மிரட்டும் திவாடியா:
அதற்கு காரணம் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவர் பஞ்சாப்க்கு எதிரான ஒரு போட்டியில் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்த வேளையில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு எதிர்பாராத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். ஆனால் அதற்குப்பின் 2021 தொடரில் பெரிய அளவில் சோபிக்காத காரணத்தால் ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அந்த ஒரு போட்டியில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

1. ஆனால் இந்த வருடம் பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கிய அவர் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது 2 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு தனி ஒருவனாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது 2 சிக்ஸர்களை பறக்க விட்டு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையையும் (பஞ்சாப்க்கு எதிராக, 2016இல்) அவர் சமன் செய்தார்.

- Advertisement -

2. மேலும் ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்பட்ட போது ஏற்கனவே 5 விக்கெட்டுகளை இழந்த குஜராத்தின் தோல்வி உறுதி என நினைத்த வேளையில் அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்ட இவர் வெறும் 21 பந்துகளில் 40* ரன்கள் விளாசி ரசித் கான் உடன் சேர்ந்து குஜராத்தின் திரில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

Rahul Tewatia 3

சைலன்ட் பினிஷர்:
அதிலும் இந்த வருடம் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சேசிங் செய்யும்போது கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை விளாசிய பேட்ஸ்மேனாகவும் அவர் முதலிடத்தில் அசத்துகிறார். அதாவது சேசிங் செய்கையில் 16 – 20 எனப்படும் கடைசி கட்ட ஓவர்களில் 48 பந்துகளை சந்தித்துள்ள அவர் அதில் 113 ரன்களை 235.42 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசியுள்ளார். இதில் 11 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கும். அதில் ஒருமுறை கூட அவுட்டானதில்லை.

- Advertisement -

இவரைத் தவிர தினேஷ் கார்த்திக், எம்எஸ் தோனி போன்ற வீரர்கள் கூட இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் அவ்வளவு ரன்கள் எடுத்ததில்லை. மேலும் இந்த வருடம் குஜராத் பங்கேற்ற 9 போட்டிகளில் சேசிங் செய்த 5 போட்டிகளில் அவர் முறையே 40* (24), 13* (3), 6 (14), 40* (21), 43* (25) என 5இல் 4 போட்டிகளில் கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்.

இதையும் படிங்க : ஐ.சி.சி செய்த அந்த தவறால் மிகப்பெரிய உலகசாதனையை நான் இழந்து விட்டேன் – வருத்தம் தெரிவித்த பாக் வீரர்

இதனால் குஜராத் அணிக்காக மட்டுமல்லாமல் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒரு சைலன்ட் பினிஷராக மிரட்டும் அவரின் திறமை உண்மையாகவே ரசிகர்களுக்கு வியப்பளிக்கும் ஒன்றாக உள்ளது.

Advertisement