ஐ.சி.சி செய்த அந்த தவறால் மிகப்பெரிய உலகசாதனையை நான் இழந்து விட்டேன் – வருத்தம் தெரிவித்த பாக் வீரர்

Sami
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக மூன்று விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார். 2001-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே போன்று 2001 முதல் 2015 வரை 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

sami 2

- Advertisement -

அதேபோன்று 2010 முதல் 16 வரை 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படி மூன்று விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய அவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை.

இந்நிலையில் உலகிலேயே அதிவேக பந்தினை அவர்தான் இருமுறை வீசி உள்ளதாகவும் அதனை சரியாக கணக்கிட படாததால் என்னுடைய மிகப்பெரிய உலகசாதனை யாருக்கும் தெரியாமல் மறைந்து போனது என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

sami 1

உண்மையாகவே நான் உலகில் மிக வேகமாக வீசப்பட்ட பந்துகளாக 2 பந்துகளை வீசி உள்ளேன். அதில் 164 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு பந்தும், 162 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பந்து என இரண்டு பந்துகள் அடங்கும். ஆனால் அப்போது பௌலிங் வேகத்தை துல்லியமாக கணிக்கும் கருவி சரியாக வேலை செய்யாததால் என்னுடைய இந்த சாதனை யாருக்கும் தெரியாமல் மறைந்து போனது.

- Advertisement -

மேலும் இதுகுறித்து ஐசிசி தரப்பிலிருந்தும் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் அவர்கள் அந்த கருவி வேலை செய்யவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். இதன்காரணமாக என்னுடைய உலகசாதனை கணக்கிட படாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இரட்டை சதமடித்த புஜாராவை கொண்டாடும் பாகிஸ்தான் ரசிகர்கள் – எதற்கு தெரியுமா? (விவரம் இதோ)

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக வீசப்பட்ட பந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயப் அக்தர் வீசப்பட்ட பந்தாக இருந்து வருகிறது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு பந்தினை வீசியுள்ளார். அந்த பந்தே இன்றளவும் உலகளவில் அதிக வேகத்தில் வீசப்பட்ட பந்தை அதிகாரபூர்வமாக சாதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement