கிரிக்கெட் விளையாடாமல் வீட்டுக்குள் இருப்பது பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கு – புலம்பும் இந்திய அணியின் இளம்வீரர்

Ind-2
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் தற்போது அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் செய்வதறியாது வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடைபெற அடுத்த சிலமாதங்களுக்கு வாய்ப்பில்லை.

IND-2

- Advertisement -

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாளை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் என அனைவரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளம் மூலம் பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது இந்திய அணியின் இளம்வீரர் துவக்க வீரரான ப்ரித்வி ஷா தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார்.

அப்படி இந்த ஓய்வு நேரத்தில் வீட்டில் இருக்கும் நேரம் குறித்து பேசிய ப்ரித்வி ஷா கூறுகையில் : தற்போது நான் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் சூழ்நிலை காரணமாக விளையாட முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் பாதுகாப்பு காரணமாக நாம் நலனுடன் இருப்பதே முக்கியம்.

Shaw

அதனால் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று நாம் அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம் என்று ப்ரித்வி ஷா கூறினார். மேலும் இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதன்படி நடக்கவேண்டும். இந்த நெருக்கடிநிலை கடந்தவுடன் ஐபிஎல் போட்டி குறித்து யோசிக்கலாம். இந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தான் கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் வீட்டில் இருப்பது பைத்தியம் பிடித்தது போல் மிகவும் டார்ச்சர் ஆக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். ஏனெனில் இந்திய அணிக்காக சீக்கிரம் அறிமுகமான அவர் தனது அபாரமான ஆட்டத்திறன் மூலம் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஊக்க மருந்து சோதனை காரணமாக எட்டு மாதங்கள் கிரிக்கெட்டில் விளையாட தடை செய்யப்பட்டிருந்தார்.

Shaw

அதனைத் தொடர்ந்து தடையில் இருந்து மீண்டு பின்னர் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் அடித்து நொறுக்கிய அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கி சற்று ஏமாற்றத்தை அளித்தார். எனவே மீண்டும் இந்திய அணியில் சிறப்பாக விளையாடும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த ஓய்வு அவருக்கு வெறுப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement