டக் அவுட் ஆனது மட்டுமின்றி பெரிய தப்பை செய்து ரசிகர்களிடம் வசமாக சிக்கிய ப்ரித்வி ஷா – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

shaw
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்து இருந்தது. அதிகபட்சமாக கோலி 74 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி மேலும் 11 ரன்கள் சேர்த்த நிலையில் 244 ரன்களுக்கு இன்னிங்சை முடித்தது.

pujara 2

- Advertisement -

அதன்பிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இந்திய பந்துவீச்சாளர்களில் அபாரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. துவக்க வீரர் மேத்யூ வேட் 8 ரன்களிலும், ஜோ பர்ன்ஸ் 8 ரன்களிலும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின்னர் மார்னஸ் லாபிஷேன் மற்றும் ஸ்மித் ஆகியோர் விளையாடினர்.

இதில் துவக்கம் முதலே லாபுஷேன்க்கு ஏகப்பட்ட வாய்ப்புகளை இந்திய அணி வீரர்கள் வழங்கினர். 4 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட் கீப்பர் சகா அவரது கேட்சை கோட்டை விட்டார். அதன் பிறகு 12 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் ஒரு முறை பும்ரா பவுண்டரி லைனில் எளிதான கேட்சை கோட்டை விட்டார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய துவக்க வீரர் ப்ரித்வி ஷா டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

Shaw

அதனை தொடர்ந்து தற்போது பீல்டிங்கிலும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். மூன்றாவது முறையாக லாபுஷேன் கொடுத்த எளிதான கேட்சை லெக் திசையில் நின்ற ப்ரித்வி ஷா பிடிக்க தவறவிட்டார். அவரின் இந்த தவறை சுட்டிக் காட்டியுள்ள ரசிகர்கள் இணையத்தில் டக் அவுட் ஆனது கூட பரவாயில்லை பீல்டிங்கில் இவ்வளவு மோசமா ? இவரை அடுத்த போட்டியில் இந்திய அணிக்காக தேர்வு செய்யலாமா ? என்பது போல அவரை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

மேலும் பேட்டிங்கிலும் சரி, பீல்டிங்கிலும் சரி சிறப்பாக செயல்படாத இவரை எதற்காக அணியில் வைத்திருக்கவேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். இதுவரை மூன்று வாய்ப்புகளில் இருந்து தப்பிய லாபுஷேன் தற்போது ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 60 பந்துகளை சந்தித்த அவர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement