PBKS vs DC : பஞ்சாப்பை பந்தாடிய டெல்லி – சிஎஸ்கே’வை எச்சரிக்கும் வகையில் காலம் கடந்து ஃபார்முக்கு திரும்பிய இளம் வீரர்

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அழகான தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற 64வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து ஏற்கனவே லீக் சுற்றுடன் முதல் அணியாக டெல்லி வெளியேறிய நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் களமிறங்கியது. அந்த நிலைமையில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு மீண்டும் பிரிதிவி ஷா தொடக்க வீரராக விளையாடினார்.

இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு இந்த சீசனில் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். இருப்பினும் ஆரம்பத்திலேயே தொடர்ந்து 5 தோல்விகளை சந்திக்கும் அளவுக்கு சொதப்பலாக செயல்பட்ட அவர் விமர்சனங்களை சந்தித்ததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். ஆனாலும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பறிபோய் விட்ட நிலையில் அவருக்கு டெல்லி நிர்வாகம் இப்போட்டியில் வாய்ப்பு கொடுத்துள்ளது.

- Advertisement -

சிஎஸ்கே’வுக்கு எச்சரிக்கை:
அதை சரியாக பயன்படுத்திய அவர் கேப்டன் டேவிட் வார்னருடன் இணைந்து பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக 11 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 94 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த அந்த ஜோடியில் டேவிட் வார்னர் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (31) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட பிரிதிவி ஷா 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் கிட்டத்தட்ட 10 இன்னிங்ஸ் கழித்து முதல் முறையாக அரை சதமடித்து ஃபார்முக்கு திரும்பி 54 (38) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து மறுபுறம் விளையாடிய ரிலீ ரோசவ் டெத் ஓவர்களில் பட்டாசாக பேட்டிங் செய்து பஞ்சாப் பவுலர்களை புரட்டி எடுத்து 6 பவுண்டரி 6 சிக்சரை தெறிக்க விட்டு 82* (37) ரன்களை 221.62 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் பில் சால்ட் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 26* (14) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் டெல்லி 213/2 ரன்கள் குவித்து அசத்தியது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக சாம் கரண் 2 விக்கெட்களை சாய்ந்தார்.

- Advertisement -

இத்தனைக்கும் பிளே ஆப் சுற்றும் வாய்ப்புப் பறிபோன நிலையிலும் டெல்லி இந்தளவுக்கு அதிரடியாக விளையாடி பஞ்சாப்பின் வாய்ப்பை பறிக்கும் அளவுக்கு செயல்பட்டுள்ளது சென்னை ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைப்பதாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக பிரிதிவி ஷா ஃபார்முக்கு திரும்பும் வகையில் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் தற்போது புள்ளி பட்டியல் 2வது இடத்தில் இருக்கும் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற டெல்லிக்கு எதிராக நடைபெறும் தன்னுடைய கடைசி லீக் போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிLSG vs MI : எங்களிடம் பெரிய சூப்பர் ஸ்டார்கள் இல்லை. ஆனா.. மும்பையை வீழ்த்திய பிறகு – மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரிதிவி ஷா ஃபார்முக்கு திரும்பியதும் வார்னர், ரிலீ ரோசவ் உள்ளிட்ட அனைத்து டெல்லி முக்கிய வீரர்களும் அதிரடியாக பேட்டிங் செய்தது உண்மையாகவே சென்னை அணிக்கு மறைமுக எச்சரிக்கையை கொடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

இதையும் படிங்க: LSG vs MI : எங்களிடம் பெரிய சூப்பர் ஸ்டார்கள் இல்லை. ஆனா.. மும்பையை வீழ்த்திய பிறகு – மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டி

இருப்பினும் அது அடுத்த போட்டிக்கான நிலைமை என்ற நிலையில் தற்போது டெல்லியை தோற்கடித்து எப்படியாவது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க பஞ்சாப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement