LSG vs MI : எங்களிடம் பெரிய சூப்பர் ஸ்டார்கள் இல்லை. ஆனா.. மும்பையை வீழ்த்திய பிறகு – மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டி

Stoinis
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதோடு இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் அவர்கள் தற்போது பிரகாசப்படுத்தியுள்ளனர். அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

MI vs LSG

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக மார்க்கஸ் ஸ்டாய்ன்ஸ் 47 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 89 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் தொடர்ந்து 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 172 ரன்கள் மட்டுமே குவிக்க ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் அடித்த லக்னோ அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

Stoinis 1

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் வெற்றி குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

அறுவை சிகிச்சை காரணமாக விளையாடாமல் இருந்த மோசின் கான் மீண்டும் வந்து சிறப்பாக பந்து வீசியதில் மிகவும் மகிழ்ச்சி, எங்கள் அணியில் ஸ்பின்னர்கள் மற்றும் மோசின் கான் ஆகியோர் கடைசி கட்டத்தில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எங்களுக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர்.

இதையும் படிங்க : LSG vs MI : இது என்னடா சாம்பியன் டீமுக்கு வந்த சோதனை. லக்னோ அணிக்கு எதிராக மோசமான ரெக்கார்டு – விவரம் இதோ

எங்கள் அணியில் தற்போது பெரிய சூப்பர் ஸ்டார்கள் இல்லை என்றாலும் அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்குவதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. எங்கள் அணியில் தற்போது கே.எல் ராகுலை நாங்கள் தவறவிட்டாலும் எங்கள் அணியை க்ருனால் பாண்டியா மிகச் சிறப்பாக வழிநடத்துகிறார். அதோடு ஆண்டி பிளவரும் எங்கள் அணியுடன் இருக்கிறார் என்று ஸ்டாய்னிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement