- Advertisement -
ஐ.பி.எல்

நான் 99 ரன்னில் ஆட்டமிழந்தது கூட கஷ்டமில்லை. இதுதான் எனக்கு கடினமாக இருந்தது – ப்ரிதிவி ஷா

நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 10 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச டெல்லி முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை அடித்தது. கொல்கத்தா அணி சார்பாக 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார்.

பிறகு ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் சரியாக 185 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பில் துவக்க வீரர் பிரிதிவி ஷா சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 99 ரன்களை குவித்தார். இதனால் போட்டி டை ஆனது. பிறகு வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி 10 ரன்களை குவித்தது. பிறகு கொல்கத்தா அணியால் 7 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

99 ரன்களை குவித்த ஆட்டநாயகன் பிரிதிவி ஷா கூறியதாவது : இந்த போட்டி மிக சிறப்பான போட்டியாகும். எனது ஆட்டத்திறனை இந்த போட்டியில் கொஞ்சம் மாற்றி அமைத்தேன். மேலும், பெரிய ஷாட்களை அதிக அளவில் ஆட விருப்பட்டேன். போட்டியை கடைசி வரை கொண்டு சென்று பதற்றத்தில் போட்டியை வெல்ல எனக்கு விருப்பமில்லை. 99 ரன்களில் ஆட்டமிழந்ததை விட ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்காததே எனக்கு வருத்தமளித்தது.

இருப்பினும், சூப்பர் ஓவரில் எங்களது அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர். இந்த மைதானத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்ததால் அது என்னுடைய பேட்டிங்கிற்கு பெரிதும் உதவியது என்று பிரிதிவி ஷா கூறினார்.

- Advertisement -
Published by