RR vs DC : ஐ.பி.எல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்டம்ப் பைல்ஸ் இரும்பில் தயாரிக்கப்படுகிறதா ? – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Prithvi
- Advertisement -

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி இராண்டாவதாக சேசிங் செய்து போட்டியை வென்றது. இந்த வெற்றிக்கு காரணமாக துவக்க வீரரான ப்ரித்வி ஷாவும் அமைந்தார். இந்த போட்டியில் முக்கியமான நேரத்தில் 16 ஆவது ஓவரில் 42 ரன் எடுத்திருந்த ஷா க்ளீன் போல்ட் ஆனார். ஆனால், பைல்ஸ் கீழே விழாததால் அவுட் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஸ்டம்பில் பந்து பட்டதும் லைட் மட்டும் எரிந்தது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இதனை கண்ட ரசிகர்கள் ஏற்கனவே பல போட்டிகளில் பந்து ஸ்டம்பை தீண்டி சென்றும் பைல்ஸ் விழாததை ரசனையான முறையில் விமர்சித்துள்ளனர். அதாவது ஐ.பி.எல் தொடரில் பயன்படுத்தப்படும் ஸ்டம்பில் உள்ள பைல்ஸ் என்ன இரும்பில் தயாரிக்கப்படுகிறதா ? எவ்வளவு வேகமாக பந்து பட்டாலும் பைல்ஸ் கீழே விழமறுக்கிறது என்று விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 50 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக பண்ட் 36 பந்தில் 78 ரன்களை அடித்தார். தவான் 27 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.

Advertisement