விராட் கோலி கொடுத்த அட்வைஸ் தான் நான் அவரையே வீழ்த்த காரணம் – பிரின்ஸ் யாதவ் பேட்டி

Prince Yadav
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 50-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணியை வீழ்த்தி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்தது.

விராட் கோலியை வீழ்த்தியது குறித்து : பிரின்ஸ் யாதவ் மகிழ்ச்சி

பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணி 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் மட்டுமே குவித்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தாலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணி சேஸிங்கை துவங்கியதும் முதல் விக்கெட்டாக ஜேக்கப் பெத்தல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதேவேளையில் இந்த தொடரில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி தொடர்ந்து தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தான் சந்தித்த இரண்டாவது பந்தியிலேயே லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தில் கிளீன் போல்ட் முறையில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதுமட்டுமின்றி இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி அவர் 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி லக்னோ அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகவும் இருந்தார். இந்நிலையில் விராட் கோலியை தான் வீழ்த்தியது குறித்து போட்டி முடிந்து சில சுவாரஸ்யமான கருத்துக்களை பிரின்ஸ் யாதவ் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கடைசியாக நான் ஆர்.சி.பி அணிக்கெதிராக விளையாடிய போட்டிக்கு பிறகு விராட் கோலி பையாவிடம் சென்று பேசினேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த சீசன் முழுசா எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. ஆர்.சி.பி வெற்றிக்கு பிறகு – ரிஷப் பண்ட் வெளிப்படை

அப்போது அவர் என்னிடம் பந்து வீச்சிற்கு சாதகமான சில அறிகுறிகளை வழங்கினார். அதாவது ஆடுகளத்தில் ஸ்விங் மற்றும் சீம் கிடைக்கும் போது சரியான லைன் மற்றும் லென்த்தில் தொடர்ந்து பந்துகளை வீசு விக்கெட்டுகள் தானாக கிடைக்கும் என்று அறிவுரை கூறினார். அவர் கூறியபடியே அவரது அறிவுரையை பயன்படுத்தி லைன் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்தி பந்து வீசினேன். அப்படி வீசி அவரையே வீழ்த்தியதில் மகிழ்ச்சி என பிரின்ஸ் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement