ஆர்.சி.பி அணிக்கு எதிராக நேற்று தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் போட்டியில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தனர். அதே வேளையில் ஆர்.சி.பி அணி தங்களது நான்காவது தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.
ஆர்.சி.பி அணிக்கெதிரான வெற்றி குறித்து : ரிஷப் பண்ட் பேட்டி
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவிக்க அடுத்ததாக 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் மட்டுமே குவித்தது.
அதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர்கள் பெற்ற இந்த வெற்றி அந்த அணியின் நிர்வாகத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டி எங்களுக்கு ஒரு நல்ல போட்டியாக அமைந்தது. இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்த தொடரில் நாங்கள் நிறைய விடயங்களை முயற்சி செய்து பார்த்தோம். இறுதியாக இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு ஒரு கடினமான தொடராக இருந்தது. இப்படி ஒரு கடினமான சூழ்நிலையில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இதையும் படிங்க : யாரை யூஸ் பண்றதுன்னு குழப்பமே வந்துடுச்சி.. தோல்விக்கு பிறகு மிட்சல் மார்ஷை பாராட்டிய – ரஜத் பட்டிதார்
இந்த போட்டியின் போது கடைசி ஓவரில் செப்பர்டு இருந்ததால் அவருக்கு எதிராக திக்வேஷ் ரதியை பந்துவீச கொண்டு வந்தேன். இந்த போட்டியில் மிட்சல் மார்ஷ் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதேபோன்று எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என ரிஷப் பண்ட் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



