39 வயசு ஆனா என்ன? நான் ரிட்டயர்டு ஆக மாட்டேன் – விடாமல் அடம்பிடிக்கும் ஜாம்பவான் வீரர்

Anderson
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற உள்ள இந்த தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 8ஆம் தேதி ஆண்டிகுவா நகரில் இருக்கும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் அங்கு தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

England

- Advertisement -

முன்னதாக இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய ஜோடியின் பெயர் இடம் பெறாதது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கழற்றிவிடபட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன்:
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் படுமோசமாக செயல்பட்ட ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4 – 0 என்ற கணக்கில் கௌரவம் மிக்க ஆஷஸ் கோப்பையை கோட்டை விட்டது. அதனால் மிகவும் கடுப்பான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்து அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்தது.

england

அதன் ஒரு கட்டமாகவே நீண்ட காலங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சு துறையில் முதுகெலும்பாக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் கழட்டிவிட பட்டார்கள். இத்தனைக்கும் இவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 2 டாப் பந்துவீச்சாளர்களாக சாதனை படைத்துள்ளார்கள்.

- Advertisement -

கெஞ்சும் ஆண்டர்சன்:
ஆஷஸ் தோல்விக்காக ஏற்கனவே இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்பில் இருந்த ஆஷ்லே கில்ஸ், கிறிஸ் சில்வர்வுட் ஆகியோரை பதவி நீக்கம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற மூத்த வீரர்களை நீக்கியது பெரிய ஆச்சரியமில்லை என்றே கூறலாம். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது 4வது இடத்தில் தடுமாறும் தங்கள் அணியை தரம் உயர்த்துவதற்காக பல அதிரடி மாற்றங்களை செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தயாராகி விட்டதாக தெரிகிறது.

Anderson-3

இந்நிலையில் இங்கிலாந்து அணியில் மீண்டும் எப்படியாவது வாய்ப்பளிக்க வேண்டும் என ஜேம்ஸ் ஆண்டர்சன் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி பிபிசி இணையதளத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சில வாரங்களாக மிகவும் வித்தியாசமாக உணர்கிறேன். தற்போது என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். என்னை அணியில் இருந்து நீக்கிய முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது என்றாலும் இதற்காக நான் பின்வாங்க போவதில்லை. இது என்னுடைய கிரிக்கெட் கேரியரின் முடிவாக இருந்துவிடக் கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என கூறினார்.

- Advertisement -

செயல்பாடுகளை பாருங்க:
இது பற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “இப்போதும் கூட சிறப்பாக செயல்பட முடியும் என உணர்கிறேன். சொல்லப்போனால் 35 வயதை கடந்த பின் என்னுடைய சாதனைகள் முன்பை விட அதிகமாக வரத் துவங்கியது. எனவே வயதால் நான் சோர்வடைந்து எதையும் இழக்கவில்லை என நினைக்கிறேன். கடந்த 20 வருடங்களாக நிறைய விளையாடிய போதிலும் இன்னும் ஒருமுறை தீவிரமாக விளையாட விரும்புகிறேன். ஏனெனில் பந்துவீச விரும்பும் நான் ஆஸ்திரேலியாவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் திருப்தியுடன் பந்து வீசினேன்” என கூறியுள்ளார்.

anderson

பொதுவாகவே கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகள் 35 வயதைக் கடந்து விட்டால் மந்தம் அடையத் தொடங்கும். ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுவது போல அவரின் 35வது வயதுக்குப் பின் அவர் பங்கேற்ற 44 டெஸ்ட் போட்டிகளில் 160 விக்கெட்களை 21.72 என்ற மிகச் சிறப்பான சராசரியில் எடுத்துள்ளார். அதாவது அவருக்கு வயது ஆகஆக அபாரமாக செயல்பட்டு மலைபோல விக்கெட்டுகளை குவித்து வருகிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

உலகசாதனைக்கு என்ன நியாயம்:
இந்த வேளையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் கதை இதோடு முடியவில்லை வரும் காலங்களில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இருப்பினும் 39 வயதை கடந்துவிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடாமல் 39 வயதிலும் வாய்ப்பு கேட்பதை பார்க்கும் ரசிகர்கள் ஒருசில “இதில் என்ன நியாயம் உள்ளது” என்று கேட்கிறார்கள்.

anderson 1

ஏனென்றால் நீண்ட நாட்கள் விளையாடிய ஒரு ஜாம்பவான் வீரர் என்பவர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தனது நாட்டின் நலனைக் கருதி அதன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வண்ணம் கவுரவத்துடன் ஓய்வு பெறுவார்கள். அதேபோல ஒரு ஜாம்பவான் வீரர் அவர் உச்சத்தில் இருக்கும் போது ஓய்வு பெறுவது தான் மிகச்சரியான முடிவு என கிரிக்கெட் வல்லுனர்கள் பொதுவாக கூறுவார்கள்.

எடுத்துக்காட்டாக ஏபி டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் மிக உச்சபட்ச செயல்பாடுகளை வெளிப்படுத்திய போதிலும் தங்கள் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட்டு சென்றார்கள். அந்த வகையில் தற்போது உச்சபட்ச செயல்பாடுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : தீபக் ஹூடாவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம். ரொம்ப லக்கி தான் – என்ன தெரியுமா?

ஏனெனில் இதுவரை 640 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையையும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சரித்திர சாதனையும் படைத்துள்ளார்.

Advertisement