தீபக் ஹூடாவிற்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம். ரொம்ப லக்கி தான் – என்ன தெரியுமா?

Hooda-2
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி லக்னோ மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்களை குவித்தது. அடுத்ததாக தற்போது 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

INDvsSL

- Advertisement -

இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முறையே 44 ரன்னும், 89 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 57 ரன்களுடனும், ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

200 ரன்கள் இலக்கு என்பது இலங்கை அணிக்கு மிகப்பெரிய ஒன்று என்பதனால் இப்போதே இந்திய அணியின் வெற்றி உறுதியாகியுள்ளது என்று கூறலாம். இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தீபக் ஹூடாவிற்கு இந்த போட்டியில் அறிமுகம் வாய்ப்பு கிடைத்துள்ளது.

hooda 1

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த தொடரில் இடம்பெற்றிருந்த பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் டி20 தொடரில் தேர்வான தீபக் ஹூடா தற்போது இந்த போட்டியில் அறிமுக வீரராக விளையாடி வருகிறார். ஒருவகையில் தீபக் ஹூடா மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் 2015ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடர்களில் அவர் விளையாடி வந்தாலும் கடந்த சில வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அதிலும் குறிப்பாக இந்திய அணி விளையாடிய 1000-வது போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான முதலாவது போட்டியில் ஏன் ருதுராஜ் கெய்க்வாட் ஆடல தெரியுமா? – ரோஹித் விளக்கம்

அதேபோன்று டி20 கிரிக்கெட்டிலும் வெகு விரைவாக இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு இன்று அவருக்கு கிடைத்தது உண்மையிலேயே அதிர்ஷ்டம் என்றே கூறலாம். வலது கை பேட்ஸ்மேனான இவர் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படுவதால் இவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement