அது எப்படி கரெக்ட்டா ஐ.பி.எல் தொடருக்கு முன்னாடி காயம் சரி ஆகுது? பாண்டியாவிற்கு எதிராக – பிரவீன் குமார் கேள்வி

Praveen-Kumar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியா கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். ஆனால் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அவர் பங்கேற்று விளையாட இருக்கிறார். அவ்வப்போது காயத்தை சந்திப்பதும் மீண்டும் அதிலிருந்து திரும்ப வருவதும் அவரது வாடிக்கையாகிவிட்டது.

கடந்த இரு ஆண்டுகளாக குஜராத் டைட்டம்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்டியா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றும் மற்றொரு முறை அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றிருந்ததால் அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை வைத்த மும்பை அணி நிர்வாகம் குஜராத் அணியிலிருந்து அவரை விலைக்கு வாங்கி தற்போது மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண வீரராக விளையாட இருக்கிறார். ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து மும்பை அணியின ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வரும் வேளையில் பாண்டியா இந்த ஆண்டு கேப்டனாக செயல்பட இருப்பது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரவீன் குமார் ஹார்திக் பாண்டியாவின் காயம் குறித்த சில கேள்விகளை எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நீங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக காயத்தில் சிக்குவீர்கள். அதனால் நாட்டுக்காக விளையாடும் போட்டிகளில் பங்கேற்க மாட்டீர்கள். ஆனால் சரியாக ஐபிஎல் தொடருக்கு முன்னதாக உங்களது காயம் குணமடைந்து விடும்.

- Advertisement -

இதுபோன்ற ஒரு விஷயம் நடக்கவே கூடாது. ஒரு வீரர் பணம் சம்பாதிக்கலாம் அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் முதலில் நாட்டுக்காகவும் தங்களது மாநில அணிக்காகவும் விளையாட வேண்டியது அவசியம். ஆனால் இப்போது உள்ள வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள் என பாண்டியாவை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரவீன் குமார் கூறுவது போலவே : கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக வெகு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் பாண்டியா முக்கிய போட்டிகளுக்கு முன்னதாக காயம் அடைந்து இந்திய அணியில் இருந்து வெளியேறுகிறார்.

இதையும் படிங்க : பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் இதுவரை இணையாத விராட் கோலி – காரணம் என்ன?

ஆனால் சரியாக ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மட்டும் மீண்டும் முழு உடற்தகுதியை பெற்று ஐபிஎல் போட்டிகளில் தவறாமல் பங்கேற்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளில் இதேபோன்று பார்த்தால் பலமுறை இந்திய அணியில் இருந்து விலகி சரியான நேரத்தில் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியிலும் கேள்விகளை எழுப்பிள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement