பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் இதுவரை இணையாத விராட் கோலி – காரணம் என்ன?

Kohli
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டிற்கான 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் ஒரு வாரத்தில் துவங்க உள்ளது. எதிர்வரும் மார்க் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்க இருக்கும் நடப்பு ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியே பெரிய இரு அணிகளுக்கு இடையே நடைபெற இருப்பதினால் எந்த தொடரின் மீதான எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்க சென்னை அணியின் வீரர்கள் மார்ச் மாதம் 1-ஆம் தேதியே சேப்பாக்கம் வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

அதேபோன்று இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் பெங்களூரு அணியும் இந்த ஐபிஎல் தொடருக்காக தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து தயாராகி வருகிறது.

ஆனாலும் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்னும் அந்த அணியில் இணையாதது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. அண்மையில் தனது இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட விராட் கோலி இன்னமும் இங்கிலாந்தில் இருந்து நாட்டு திரும்பாமல் இருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் பெங்களூரு அணியுடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மார்ச் 19ஆம் தேதி அவர் பெங்களூரு அணியுடன் பயிற்சி முகாமில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 தொடரில் 2016 மாதிரி டேஞ்சரான கிங் கோலியை பாப்பீங்க.. காரணம் இது தான்.. இர்பான் பதான்

தற்போது 35 வயதை எட்டியுள்ள விராட் கோலி ஏற்கனவே எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படலாம் என்கிற பேச்சு அடிபட்டு வரும் வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே அவருக்கு டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்கும் என்று பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement