ரசிகர்கள் திருந்தனும்.. தோனியை பற்றி கம்பீர் சொன்னது உண்மை தான்.. பிரவீன் குமார் பேட்டி

Praveen Kumar 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு தங்களுடைய சொந்த மண்ணில் எம்எஸ் தோனி தலைமையில் உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடரில் கங்குலி உருவாக்கிய வீரர்களை மிகச் சிறப்பாக வழி நடத்திய கேப்டன் தோனி பேட்டிங்கில் ஆரம்பம் முதலே பெரிய ரன்கள் குவிக்க தடுமாறி வந்தார்.

இருப்பினும் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆரம்பத்திலேயே சச்சின், சேவாக் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அப்போது முத்தையா முரளிதரனை எதிர்கொள்ள யுவராஜ் தடுமாறுவார் என்பதை உணர்ந்து முன்கூட்டியே களமிறங்கிய அவர் எதிர்ப்புறம் நங்கூரமாக விளையாடிய கம்பீருடன் சேர்ந்து அபார பார்ட்னர்ஷிப் அமைத்து மறக்க முடியாத சிக்ஸருடன் ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

கம்பீரின் கருத்து:
அதன் காரணமாக ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற தோனி அடித்த சிக்ஸர் உலக அளவில் மிகவும் பிரபலமானது. அதனால் 2011 உலகக் கோப்பை என்றாலே தோனி தான் அனைவருடைய மனதிலும் முதலாவதாக வந்து நிற்கிறார். அதே காரணத்தால் தோனியை 2011 உலகக் கோப்பை ஹீரோவாகவும் பல இந்திய ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுகின்றனர்.

ஆனால் சச்சின் முதல் ஜாஹீர் கான் வரை அனைவரும் சேர்ந்து உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த நிலையில் தோனியை மட்டும் ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுவதாக கௌதம் கம்பீர் விமர்சித்திருந்தார். அத்துடன் தற்போதுள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையும் ஹீரோக்கலாக கொண்டாடுவதை ரசிகர்கள் நிறுத்தினால் தான் இந்திய அணி ஒற்றுமையாக செயல்பட்டு உலக கோப்பையை வெல்ல முடியும் என்றும் கம்பீர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவருடைய கருத்தை வரவேற்று முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கம்பீர் பாய் மிகவும் சரியாக சொன்னார். இது மல்யுத்தம் போன்ற மற்ற விளையாட்டுகள் கிடையாது. கிரிக்கெட்டில் ஒரு வீரர் மட்டும் வெல்ல முடியாது. யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகள் எடுத்து நிறைய ரன்கள் அடித்தார். ஜஹீர் கான் 21 விக்கெட்டுகள் எடுத்தார். கௌதம் கம்பீர் 2007, 2011 ஆகிய 2 தொடர்களின் ஃபைனலிலும் ரன்கள் அடித்தார். தோனி 2011 ஃபைனலில் ரன்கள் அடித்தார்”

இதையும் படிங்க: தோனியே இனிமேல் பாப்பாரு.. மற்றொரு குட்டி மலிங்காவை தட்டி தூக்கிய சிஎஸ்கே.. காசி விஸ்வனாதன் தகவல்

“பொதுவாக குறைந்தது 3 பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருந்து 2 பவுலர்கள் விக்கெட்டுகளை எடுத்தால் தான் ஒரு அணி வெல்லும். எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் ஒரு வீரர் தொடரை வெல்ல முடியாது. இருப்பினும் இந்திய கிரிக்கெட்டில் ஹீரோவாக கொண்டாடப்படும் கலாச்சாரம் இருக்கிறது. 1980 முதலே உள்ள இந்த கலாச்சாரம் தவறானது. சில நேரங்களில் கிரிக்கெட்டர்கள் கிரிக்கெட்டை விட பெரியவர்களாக பாவிக்கப்படுகின்றனர். குறிப்பாக அதிக பிராண்ட் சப்போர்ட் கொண்டவர்கள் அதிக வெளிச்சத்தை பெறுகின்றனர்” என்று கூறினார்.

Advertisement