தோனியே இனிமேல் பாப்பாரு.. மற்றொரு குட்டி மலிங்காவை தட்டி தூக்கிய சிஎஸ்கே.. காசி விஸ்வனாதன் தகவல்

Guhadas Madhulan
- Advertisement -

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இந்த வருடம் 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க போராட உள்ள எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

முன்னதாக கடந்த வருடம் காயத்தால் முழுமையாக விளையாடாத தீபக் சஹருக்கு பதிலாக இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வாய்ப்பு பெற்றார். அந்த வாய்ப்பில் இலங்கை ஜாம்பவான் முன்னாள் வீரர் லசித் மலிங்கா போல சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி 19 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

மற்றொரு மலிங்கா:
அதனால் மும்பைக்கு மலிங்காவை போல சென்னைக்கு பதிரனா கிடைத்துள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் மலிங்காவை போலவே சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசும் மற்றுமொரு இளம் பவுலரை சிஎஸ்கே கண்டறிந்துள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணம் நகரைச் சேர்ந்த குகதாஸ் மதுலன் எனும் 17 வயது கொண்ட அந்த வீரர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியுள்ளார்.

குறிப்பாக செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி அளவிலான தொடரில் அதிரடியான வேகத்தில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி அசத்திய அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் கண்டறிந்துள்ளது. அதனால் ஐபிஎல் 2024 தொடரில் நெட் பவுலராக செயல்படுவதற்கு அவரை அழைத்து வந்துள்ளதாக தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் அவரை நெட் பவுலராக அழைத்து வந்தோம்”

- Advertisement -

“இது சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தேர்வாகும். அதில் எம்எஸ் தோனி ஈடுபடவில்லை. ஸ்லிங்கி ஆக்சனை கொண்டுள்ள மதுலன் எங்களுக்கு பயிற்சியில் உதவியாக இருப்பார் என்று நாங்கள் கருதினோம். பொதுவாக நாங்கள் வித்தியாசமான வேரியசன்களை கொண்டுள்ள பவுலர்களை பயிற்சியில் பயன்படுத்துவோம். அவர் அது போன்றவர்” என்று கூறினார். முன்னதாக பதிரானாவும் இதே போல முதலில் நெட் பவுலராக செயல்பட்டு பின்னர் சென்னை அணியில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இதையும் படிங்க: உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா? 100% இந்தியா ஜெய்க்குமா? விராட் கோலி பற்றிய செய்தியால் கொதித்த ஸ்ரீகாந்த்

எனவே தற்போது பதிரனா காயத்தை சந்தித்துள்ள சூழ்நிலையில் இந்த இளம் வீரர் நெட் பவுலராக செயல்படுவது சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு வலைப்பயிற்சியில் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்றே சொல்லலாம். மேலும் வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு தோனி போன்ற முக்கிய நபர்களை கவரும் பட்சத்தில் வருங்காலங்களில் குகதாஸ் மதுலன் சிஎஸ்கே அணிக்கு விளையாடுவதற்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement